தோனி பற்றிய பேச்சை தடுத்து நிறுத்திய அஸ்வின்.. சிஎஸ்கே பற்றி பேசாத காரணம் என்ன? – அவரே சொன்ன தகவல்

0
114
Ashwin

ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூபில் தோனி பற்றிய பேச்சை தடுத்து நிறுத்தி இருக்கிறார். மேலும் தான் ஏன் சிஎஸ்கே அணி பற்றி யூடியூபில் தற்பொழுது பேசுவதில்லை என்பது குறித்தும் அவர் சிறிய விளக்கம் அளித்திருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டு விட்டார். அஸ்வின் நீக்கத்திற்கு பிறகு லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளின் போது அஸ்வின் யூட்யூப் சேனலில் வைக்கப்பட்ட விமர்சனங்கள் ரசிகர்கள் இடையே பரவலான எதிர்ப்பை சந்தித்தது.

- Advertisement -

சிஎஸ்கே பற்றி பேச மாட்டோம்

இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பற்றி தாங்கள் எந்த விவாதத்தையும் நடத்த மாட்டோம் என்றும், இப்படியான விவாதங்கள் சில விரும்பத்தகாத வகையில் சென்றதாகவும், அதே சமயத்தில் மற்ற அணிகளின் போட்டி குறித்து தாங்கள் விவாதம் நடத்துவோம் என்றும் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது யூடியூப் சேனலில் சி எஸ் கே அணி பற்றிய எந்தவிதமான விவாதங்களும் நடைபெறவில்லை. தொடர்ந்து மற்ற அணிகளின் விவாதங்கள் மட்டுமே நடைபெற்றது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் ஒரு நேரலை விவாதத்தில் கலந்து கொண்டார்.

- Advertisement -

தோனி பற்றி பேச்சை நிறுத்திய அஸ்வின்

அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஒருவர் அணியை வழிநடத்தும் கேப்டனின் பங்கு எவ்வாறு என்பதையும், அஸ்வின் கேப்டனாக வழி நடத்திய அணி தான் டிஎன்பிஎல் தொடரை வென்றது என்றும், மேலும் தற்போது ஐபிஎல் தொடரில் கேப்டனாக சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மேலும் தோனி போன்றவர்கள் கேப்டனாக செயல்படுவதின் அவசியம் பற்றியும் பேசினார்.

இதையும் படிங்க : ரஜத் பட்டிதார் டீம்ல ஒருத்தர் கூட அறிவை யூஸ் பண்ணல.. தம்பி இத செய்ய என்ன பிரச்சனை? – சேவாக் விமர்சனம்

அப்போது உடனே உள்ளே அஸ்வின் தோனி பற்றி பேசக்கூடாது என தடுத்து விட்டார். ஆனால் தோனி பற்றி பேசியவர் நீங்கள் தான் பேசக்கூடாது நான் பேசலாம் என்றார். அதற்கு பதில் அளித்து இருந்த அஸ்வின் கடந்த முறை கூட தான் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பற்றி தான் பேசவில்லை என்று விளக்கம் அளித்தார். இதன் மூலம் சாதாரணமாக கூட நடப்பு ஐபிஎல் தொடர் முடியும் வரையில் சிஎஸ்கே மற்றும் அந்த அணி வீரர்கள் பற்றி அஸ்வின் எதுவும் பேச மாட்டார் என்று தெரிகிறது!

- Advertisement -