இந்தியாவின் துணை கேப்டன் ஆகும் அஸ்வின்! குவியும் ஆதரவு

0
5659

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வரும் நிலையில் அந்தப் பதவியை அஸ்வினுக்கு வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள சமூக வலைத்தள பதிவில் கே எல் ராகுல் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து  இதுவரை பெரிய அளவில் எதையும் சாதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.

- Advertisement -

கே எல் ராகுலுக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு போல் சமீபத்தில் எந்த வீரருக்கும் அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்ததில்லை என்றும் ,கே எல் ராகுல் உண்மையிலே மச்சக்காரர்தான் என்று வெங்கடேஷ் பிரசாத் சாடியுள்ளார். பேட்டிங் செய்யாமல் இருக்கும் கே எல் ராகுலுக்கு இந்திய டெஸ்ட் அணையின் துணை கேப்டன் பதவியை கொடுத்து நிலைமையை பிசிசிஐ சிக்கல் ஆக்கிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

- Advertisement -

இந்தியாவில் கிரிக்கெட் தொடர்பாக சிறப்பாக யோசிக்கும் மூளை அஸ்வினுக்கு தான் இருக்கிறது என்று பாராட்டியுள்ள அவர் அஸ்வின் தான் இந்திய துணை கேப்டன் ஆகும் தகுதி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு வேலை அஸ்வின்  வேண்டாம் என நினைத்தால் புஜாராவுக்கும், ஜடேஜாவுக்கும் வாய்ப்பு தாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை இந்திய மண்ணில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.

இருவரும் தலா 25 முறை இந்திய மண்ணில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்கள். அஸ்வின் எப்போதுமே வித்தியாசமாக யோசித்து என்ன செய்தால் விக்கெட் கிடைக்கும்? எந்த யுக்திகளை அமைக்க வேண்டும் என்பதில் கில்லி போல் செயல்படுவார். மேலும் கும்ப்ளே போன்ற ஜாம்பவானுக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்த நிலையில் அஸ்வினுக்கும் இதுபோன்று கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.