இன்று சிஎஸ்கே அணி ஆர்சிபி அணியை எதிர்த்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு எப்படியான பிளேயிங் லெவன் உடன் சிஎஸ்கே சென்றால் சரியாக இருக்கும்? என்று பார்க்கலாம்.
சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டியில் பேட்டிங் சரியில்லாமலும் இன்னொரு போட்டியில் பந்துவீச்சு சரியில்லாமலும் தோல்வி வந்தது குறிப்பிடத்தக்கது.
28 கோடி கவலை வேண்டாம்
இந்த ஆண்டு மினி ஏலத்தில் மொத்தம் 28 கோடி ரூபாய் கொடுத்து கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் இருவரும் வாங்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டர் அனுபவம் இல்லாமல் பலவீனமாக உள்ளதால், இவர்கள் இருவரையும் சேர்த்து விளையாட வைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இருவரும் மிடில் ஆர்டரில் விளையாடினார்கள். இதன் காரணமாக இறுதிக் கட்டத்தில் வேகமாக ரன்கள் எடுக்க முடியவில்லை. கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருக்க முடியும்.
இவர்களைக் கொண்டு வாருங்கள்
எனவே ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு உர்வில் படேல், ஜேமி ஓவர்டன் மற்றும் அகேல் ஹுசைன் மூவரும் பிளேயிங் லெவனில் வருவது கட்டாயம் ஆகிறது.
இதில் உர்வில் படேல் மிடில் ஆர்டரிலும், ஜேமி ஓவர்டன் பினிஷிங் இடத்திலும் இருப்பார்கள். மேலும் அகேல் ஹுசைன் பவர் பிளேவில் பந்து வீசக்கூடியவர். இத்துடன் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் சில சிக்ஸர்கள் அடிக்க முடிந்தவர். எனவே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டு துறைகளிலும் இவர்களை வைத்து பலப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க : இளம் திறமைகளை கண்டறிவது விஷயம் அல்ல.. அவங்களை தக்க வைக்கணும்.. சிஎஸ்கேவை மறைமுகமாக தாக்கிய அஸ்வின்
ருதுராஜ்
சஞ்சு சாம்சன்
ஆயுஸ் மத்ரே
சர்பராஸ் கான்
சிவம் துபே
உர்வில் படேல்
ஜேமி ஓவர்டன்
அகேல் ஹுசைன்
நூர் அகமத்
மேட் ஹென்றி
அன்சூல் காம்போஜ்
கலீல் அகமத் (இம்பாக்ட் பிளேயர்)






