ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்திய அணி முதல் போட்டியில் யுஏஇ அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி எப்படி அமையும் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக துணை கேப்டன் கில் வருவது உறுதியாக இருக்கிறது. அவருடன் சேர்ந்து அபிஷேக் ஷர்மா அல்லது சஞ்சு சாம்சன் யார் வருவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் யார் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
யுவராஜ் சிங் அப்டேட் வெர்ஷன்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” அபிஷேக் சர்மாவின் முழுமையான தாக்குதல் பேட்டிங் அணுகுமுறையை யுஏஇ விக்கெட்டுகளில் எப்படி பலன் கொடுக்கும் என்பதை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர் அருமையான ஒரு வீரர். யுவராஜ் சிங்கின் மேம்படுத்தப்பட்ட அப்டேட் வெர்ஷன்”
“அதே சமயத்தில் ரன்கள் எடுக்க வேண்டிய அழுத்தம் கில் மீது நிச்சயம் இருக்கும். இந்த காரணத்தினால் அவரும் 140 முதல் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் எடுப்பதற்கு முயற்சி செய்வார். எனவே அவரிடமிருந்தும் ரன்கள் வரும்”
சாம்சனுக்கு இடம் கிடைக்குமா
“தற்போதைய அணியில் 10 பேரின் இடம் உறுதியானது. ஆனால் துவக்க இடத்தில் சாம்சனுக்கு இடம் கிடைக்குமா என்று என்னை கேட்டால் நிச்சயம் கிடைக்காது. அவர் தனது வாய்ப்புக்காக தொடர்ந்து கதவை தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். கில் விளையாடப் போவது உறுதியாகிவிட்டது. சாம்சன் ஆசிய கோப்பையில் தொடங்கப் போவது கிடையாது”
இதையும் படிங்க : 2 உலக கோப்பை ஜெயிச்சாலும்.. ரோகித்தால் அவங்க இடத்தை அடைய முடியாது – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
“இந்த ஆசியக் கோப்பை தொடரில் பேவரைட் அணியாக இந்தியா இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வெல்லாவிட்டாலோ அல்லது யாராவது அவர்களை தோற்கடித்தாலோ நான் அதிர்ச்சி அடைவேன். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் பாகிஸ்தான் கடைசியாக இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்து இரண்டாவது சிறந்த அணியாக இலங்கையை சொல்லலாம். ஆப்கானிஸ்தானும் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறது.






