இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள மாட்டார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இந்த முறை 5 போட்டிகள் கொண்ட ஆசஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரை இங்கிலாந்து அணி ஒன்றுக்கு நான்கு என மிக மோசமாக தோல்வி அடைந்து நாடு திரும்பி இருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி நிர்வாகம், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீது கடுமையான விமர்சனங்கள் இங்கிலாந்தில் வைக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து அணியின் பிரச்சனை
இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் அதிரடியான முறையில் அணுகி வருகிறது. இதன் காரணமாக அவர்களால் தேவையான இடத்தில் பிரேக் போட்டு விளையாட முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு சில நேரங்களில் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தாலும் கூட அதை பயன்படுத்திக் கொண்டு பெரிய ஸ்கோருக்கு செல்ல முடியவில்லை.
உதாரணமாக சிட்டியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 384 ரன்கள் எடுத்த ஆடுகளத்தில், ஆஸ்திரேலியா 500 ரன்கள் தாண்டி குவித்தது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சென்று விட்ட நிலையில், பிறகு ஸ்மித் பொறுப்பை எடுத்துக்கொண்டு சரியாக விளையாடி சதம் அடிக்க ஆஸ்திரேலியா பெரிய ஸ்கோருக்கு சென்றது. இந்த வகையில் இங்கிலாந்து அணியில் யாரும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மாறப்போவது கிடையாது
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இந்த ஆசஸ் டெஸ்ட் தொடர் முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத சுமாரான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, எல்லா வகையிலும் பலம் கொண்ட இங்கிலாந்து அணி மோதிய தொடர். ஆனால் அவர்கள் தொடரை ஒன்றுக்கு நான்கு என இழந்திருக்கிறார்கள். நிச்சயமாக இப்படி ஒன்றை அவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்பது உண்மை. அவர்களின் அணி தேர்வு வரையில் தவறாக இருந்தது”
இதையும் படிங்க : டி20 உலக கோப்பை பைனலில் இந்தியாவை தோற்கடிப்போம்.. டெஸ்ட்ல பண்ணின மாதிரிதான் – கிரிம் ஸ்மித் பேச்சு
“இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கலம் இந்தத் தொடர் தோல்விகள் குறித்து கேட்கப்பட்ட பொழுது தங்களுடைய அணுகு முறையில் சில மேம்படுத்திக்கொள்ள வேண்டிய இடங்கள் இருப்பதாகவும், அதை மட்டும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். எனவே தன் அணுகுமுறையை முழுமையாக மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.






