சாய் சுதர்சன் செஞ்சது எனக்கு வருத்தமா தான் இருந்தது.. அடுத்த முறை பவர் பிளேவில் ஆட எனக்கு வாய்ப்பு தருவார் என்று நினைக்கிறேன் – கில் பேட்டி

0
24
Gill

நேற்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேட்டி அளித்திருக்கிறார்.

இந்த போட்டியில் குஜராத் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது பவர் பிளேவில் பெரும்பாலான பந்துகளை சாய் சுதர்சனே சந்தித்து விளையாடினார். கில் விளையாடுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. மேலும் மெதுவாக ஆரம்பித்து, நடுவில் அடித்த விளையாடி இறுதியில் மீண்டும் கோட்டை விட்டார்கள். இதனால் 230 ரன்கள் வரவேண்டியது 205 ரன்கள் மட்டுமே வந்தது.

- Advertisement -

தவறான பேட்டிங் அணுகுமுறை

இந்த போட்டியில் குஜராத் முதலில் மெதுவாக பவர் பிளேவில் விளையாடியது. ஆனால் ஆடுகளம் நன்றாக இருந்தது. இதேபோல 16 முதல் 19 ஓவர்களில் கடைசியில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதுவெல்லாம் அந்த அணியின் ரன் ரேட்டை உயராமல் செய்தது.

மேலும் நேற்று குஜராத் அணியின் இரண்டாவது விக்கெட் 15 ஓவர்கள் தாண்டி விழுந்தது. அந்த நேரத்தில் ஜேசன் ஹோல்டர், திவாட்டியா போன்றவர்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் வாஷிங்டன் சுந்தரை அனுப்பி வைத்தார்கள். அவரால் பெரிய அளவில் அதிரடியாக விளையாட முடியவில்லை.

- Advertisement -

அடுத்த முறை நம்புகிறேன்

இதுகுறித்து சுப்மன் கில் கூறும் போது “நாங்கள் 16 முதல் 19 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதனால் எதிர்பார்த்த ரன் வரவில்லை. பவர் பிளேவை மெதுவாக ஆரம்பித்தாலும் இறுதியில் நன்றாக முடித்து இருக்க வேண்டும். மேலும் வாஷிங்டன் சுந்தர் விராட் கோலிக்கு கேட்ச் விட்டார். ஆனால் இதுவெல்லாம் சாதாரண விஷயம்தான். அதற்குப் பிறகு நாங்கள் ஆட்டத்தில் திரும்பி வந்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க : விராட் கோலியால் இந்த விஷயம் எங்க டீமுக்குள்ள இயல்பாவே மாறிடுச்சு.. அதுக்கு முழு காரணம் அவர்தான் – படிக்கல் பேட்டி

“மேலும் இந்த ஆடுகளத்தில் நாங்கள் சரியான லென்த்தில் அதிக முறை பந்து வீசவில்லை. சில பந்துகள் தவறான இடங்களில் தவறி விழுந்து விட்டது. மேலும் சாய் சுதர்சன் கடந்த இரண்டு போட்டிகளாக ஆட்டம் இழந்த விதம் வருத்தம் அளித்தது. ஆனால் அதை அவர் சரி செய்து கொண்டது மகிழ்ச்சி. மேலும் அடுத்த போட்டியில் பவர் பிளேவில் அவர் எனக்கு விளையாட வாய்ப்பு கொடுப்பார்” என்று நம்புகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -