“அஷ்வின் வாஷிங்டன் சுந்தரை விடஇவரைத்தான் எடுத்திருக்க வேண்டும்.. இது சரி இல்லை!” – ஹர்பஜன்சிங் போர்க்கொடி!

0
2889
Ashwin

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உலகக் கோப்பைக்கு சில நாட்களே இருக்கும் நிலையிலும், சில முக்கியமான வேலைகளை தொடர்ந்து பரிசோதித்து வருகிறது.

தற்போது இந்திய அணி ஆசியக் கோப்பையை கைப்பற்றி, இதற்கு அடுத்து இந்தியாவில் ஆஸ்திரேலியா அணியை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களுக்கு முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கடைசி போட்டிக்கு எல்லா வீரர்களும் அணிக்கு திரும்புகிறார்கள்.

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் முதல் இரண்டு ஆட்டங்களில் திலக் வர்மா, ருதுராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்றவர்கள் விளையாடுகிறார்கள். மூன்றாவது ஆட்டத்தில் இவர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கக்கூடிய எல்லா வீரர்களுக்கும் விளையாட்டு நேரத்தை கொடுக்க முடிந்தால்தான், இந்திய அணி பெஞ்ச் வலிமையோடு இருக்க முடியும் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாக அனைத்து தேர்வாக வாய்ப்பு இருக்கின்ற எல்லா வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கின்ற நோக்கம் தெளிவாகிறது. இந்த வகையில் ஆஸ்திரேலியா தொடரில் ஆப் ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த வகையில் இவர்களுக்கு மூன்று போட்டிகளிலும் மாற்றி மாற்றி நிச்சயம் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. தற்பொழுது அக்சர் படேல் காயத்தில் இருக்கின்ற காரணத்தினால், இவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இந்தியா அணி நிர்வாகம் விரும்புகிறது. இதன் காரணமாகவே இவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இவர்களுக்கு தரப்பட்டுள்ள வாய்ப்பு குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ” வேறு எந்த வீரருக்கு பதிலாகவும் சாகலை கொண்டு வர விரும்புகிறேன். அவர் ஒரு நிரூபிக்கப்பட்ட வீரர் மற்றும் மேட்ச் வின்னர். அவரைதான் நாம் தவற விடுகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!