“மாடர்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினின் மகத்தான சாதனை”! இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

0
2070

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டி தொடர்களில் ஆடி வருகிறது . நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது .

இன்றைய டெஸ்ட் போட்டியிலும் டாசில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் வார்னர் மற்றும் கவாஜா ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் . முதலாவது விக்கெட் க்கு 50 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் வார்னர் முகமது சமி வேகத்தில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதன்பிறகு உஸ்மான் கவாஜா உடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசேன் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதே ஓவரிலேயே ஆஸ்திரேலியா அணியின் ஸ்டார் ஸ்மித் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது .

இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித்தின் விக்கெட்டை பூஜ்ஜியத்தில் இரண்டு முறை ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இயான் போத்தம் அதிகபட்சமாக 148 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் . இவருக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து ஜாம்பவான் வால்ஸ் 135 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் 131 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய அணியின் சுழல் பந்து ஜாம்பவான் அணில் கும்ப்ளே அதிகபட்சமாக 111 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் . தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 101 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் . தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது . இந்திய அணியின் பந்துவீச்சில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் முகமது சமி இரண்டு விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் .