“அஸ்வின் தன்னை டீம்ல எடுக்காம இருக்க உதவி பண்ணிட்டு இருக்காரு” – சஞ்சய் மஞ்சரேக்கர் வெளியிட்ட புதிய தகவல்.!

0
20888

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 15 போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன. அவற்றின் முடிவில் 6 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்திலும் அதே 6 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. ஒரு போட்டியில் தோல்வியை தழுவிய சவுத் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கின்றன.

இந்திய அணி தனது அடுத்த போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நாளை விளையாட இருக்கிறது . இந்தப் போட்டிக்காக ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி வீரர்கள் புனே சென்றடைந்தனர். இதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை அனைத்து வீரர்களுக்கும் பயிற்சியிலிருந்து விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் செவ்வாய்க்கிழமை வீரர்கள் விருப்ப பயிற்சியில் ஈடுபட்டனர் . இந்த பயிற்சிகளை காண்பதற்காகவே புனே கிரிக்கெட் மைதானம் நிரம்பி வழிந்தது.

- Advertisement -

இந்தியா அணியின் நட்சத்திர வீரர்கள் ஆன ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை இவர்கள் அனைவரும் கடுமையான பயிற்சியில் இறங்கினர். தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் இடைவேளையின் போது இந்திய அணி துணைவியில் பயிற்சி செய்யும் வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதனைப் பார்த்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வேலையாளர் பண சஞ்சய்,மஞ்சரேக்கர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்.

அந்த வீடியோவில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணியின் ஆள் கவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு பந்து வீசி கொண்டிருந்தார். இதனை ஒரு நல்ல முடிவாக குறிப்பிட்ட சஞ்சய் மஞ்சரேக்கர் பங்களாதேஷ் அணியில் ஆப் ஸ்பின்னர்கள் அதிகம் இருப்பதால் இந்திய அணி வீரர்களின் பயிற்சிக்காக ரோஹித் சர்மா பந்து வீசுவது ஒரு நல்ல முடிவு என தெரிவித்தார். ஆனாலும் இந்திய டாப் ஆர்டர் வீரர்களில் பந்து வீச ஆளில்லாததும் ரோகித் சர்மா பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்வதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்

இதுகுறித்து பேசிய அவர்” உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக நானும் இந்த தொடரில் பந்து வீசுவேன் என ரோகித் சர்மா கூறியிருந்தார். அதற்கு ஏற்றார் போலவே அவரும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரது திறமை நம்மை வியக்க வைக்கிறது. அவரிடம் மிகச் சிறந்த பவுலிங் ஆக்சன் இருக்கிறது. பந்து வீசத் தெரிந்த ஒரு பேட்ஸ்மேன் அணியில் இருப்பதும் நல்லது தான். நான்கு முதல் ஐந்து இடது கை ஆட்டக்காரர்களைக் கொண்ட பங்களாதேஷ் அணிக்கு எதிராக ரோகித் சர்மா பந்து வீசுவது இந்தியா அணிக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்” என தெரிவித்தார்.

- Advertisement -

ரோகித் சர்மா தன்னுடைய பந்து வீச்சு பயிற்சியையும் முடித்த பிறகு இந்தியா அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் சிறிது நேரம் ஆலோசனைகளில் ஈடுபட்டார். இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய கேப்டனுக்கு பந்துவீச்சை தொடர்பாக சில ஆலோசனை வழங்குகிறார் . இதன் மூலம் தன்னை அணியில் சேர்க்காமல் இருக்க அஸ்வின் வழி செய்கிறார் என குறிப்பிட்டார். ரோஹித் சர்மாவிற்கு வந்து வீட்டில் ஆலோசனை வழங்குவதன் மூலம் தன்னை அணியில் சேர்க்காமல் இருப்பதற்கு அஸ்வின் உதவி செய்கிறார் எனக் குறிப்பிட்டார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ஆரம்ப காலங்களில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கியவர். கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்துவீச்சை கைவிட்டார். யுவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் இரண்டு ஹாட்-ட்ரிக் சாதனைகள் நிகழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற போட்டியில் பந்திவீசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.