“அணில் கும்ப்ளே சாதனையை முறியடித்த அஸ்வின்”!- “ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரும் ஜடேஜாவின் ஆதிக்கம்”!

0
340

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .

ஆஸ்திரேலியா அணியின் மார்னஸ் லபுசேன் சிறப்பாக ஆடி 49 ரண்களையும் ஸ்டீவன் ஸ்மித் 37 ரன்களையும் அலெக்ஸ் கேரி 36 ரன்கள் எடுத்தனர் . வேறு எந்த பேட்ஸ்மன்களும் நிலைத்து நின்று ஆடவில்லை . இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மிகச்சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார் . டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்துவது ரவீந்திர ஜடேஜாவுக்கு இது பதினொன்றாவது முறையாகும் .

- Advertisement -

மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 450 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த இலக்கை அஸ்வின் தனது 89 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று எட்டி இருக்கிறார் . இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின் . இதற்கு முன் இந்த சாதனை அணில் கும்ப்ளே வசம் இருந்தது . அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட் கிளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சில் மிகச்சிறந்த சராசரியை கொண்ட வீரர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் இருக்கிறார் . இந்தத் தொடர்களில் அவரது மொத்த சராசரி 18.16 ஆகும் . இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் கிளன் மேக்ராத் அவரது சராசரி 18.64. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இவரது சராசரி 21.25.

ரவீந்திர ஜடேஜா தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 23 போட்டிகளில் ஆடி உள்ள அவர் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் . இது அவர் ஒரு அணிக்கு எதிராக வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டுகள் ஆகும் . இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 29 போட்டிகளில் ஆடி 51 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் . மேலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 15 போட்டிகளில் ஆடி உள்ள ஜடேஜா 42 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மோட்டார்வை சிகிச்சை காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் எந்தவித கிரிக்கெட்டிலும் ஈடுபடாமல் இருந்த ஜடேஜா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி 177 ரன்களில் ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து இந்திய அணி தற்போது வரை 35 ரன்கள் விக்கெட் இழப்பின்றி ஆடி வருகிறது . ரோகித் சர்மா 31 ரன்களுடனும் கே எல் ராகுல் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் .