ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தார்கள் என்றால் அது நம் சென்னை பையன் அஸ்வின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த அணிக்கு திரும்பி இருக்கிறார்கள் என்பது தான்.
சென்னையில் பிறந்து வளர்ந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் சிஎஸ்கே அணியில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில் அஸ்வினை பத்தாண்டுகளுக்கு பின் மீண்டும் சென்னை அணி கொண்டு வந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அஸ்வின் தமது வாழ்க்கை ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடிவடைந்து விட்டது.
என் பயணத்தை தொடங்கிய இடத்தில் நான் மீண்டும் வந்து சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். இனி நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன் என்று கூறி இருந்தார்.
தாக்கத்தை ஏற்படுத்தாத அஸ்வின்:
சென்னை அணி அஷ்வினை ஒன்பது கோடியே 75 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் அஸ்வின் எதிர்பார்த்தபடி பெரிய அளவு சாதிக்க வேண்டும். ஒன்பது போட்டியில் விளையாடி வெறும் 33 ரன்கள் தான் அவர் எடுத்தார். மொத்தமாக அவர் ஏழு விக்கெட்டுகளை தான் வீழ்த்தி இருந்தார்.
வெறும் சில போட்டிகளில் அஸ்வின் விளையாடாமல் பெஞ்சில்தான் அமர வைக்கப்பட்டிருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் விருப்பம்:
இது தொடர்பாக சென்னை அணி நிர்வாகத்துடன் முறைப்படி தனது கருத்தை தெரிவித்து விட்டதாகவும், இதனால் ஏலத்திற்கு முன்பு தம்மை விடுவிக்குமாறு அஸ்வின் கூறியிருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் அஸ்வின் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எங்க ரூட் பற்றி அப்படி பேசிய வார்னர் கோமாளி.. இந்தியாவாலயே அதை செய்ய முடியல – மொயின் அலி கோபம்
சாம்சன் ஏற்கனவே ராஜஸ்தான் அணியிலிருந்து விலகி சிஎஸ்கேக்கு வர காய் நகர்த்தி வரும் நிலையில், தற்போது அஸ்வின் இந்த முடிவு எடுத்திருப்பது இருவரும் ஏலத்திற்கு முன்பு டிரேட் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






