எங்க ரூட் பற்றி அப்படி பேசிய வார்னர் கோமாளி.. இந்தியாவாலயே அதை செய்ய முடியல – மொயின் அலி கோபம்

0
219
Warner

ஆஸ்திரேலிய முன்னாள் வீர டேவிட் வார்னர் ஜோ ரூட் பற்றி பேசிய ஒரு கருத்து குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயின் அலி மிக காட்டமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிராக தொடரை வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் இங்கிலாந்து அணியால் சமன் மட்டுமே செய்ய முடிந்தது. இதற்கு அடுத்து பெரிய தொடராக ஆஸ்திரேலிய சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டேவிட் வார்னர் மைண்ட் கேம்

தற்போது உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தலை சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வரும் ஜோ ரூட் இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது ஆஸ்திரேலிய மண்ணில் அவர் டெஸ்ட் சதத்தை அடிப்பாரா? என்கின்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஜோஸ் ஹேசில்வுட் ஜோ ரூட்டுக்கு பெரிய தொந்தரவாக இருப்பார் எனவும், எனவே ஜோ ரூட் ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் எதையும் செய்ய முடியாது எனவும் டேவிட் வார்னர் கருத்து தெரிவித்திருந்தார். இத்துடன் 11 முறை பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வார்னர் கோமாளி

இதுகுறித்து மொயின் அலி பேசும் பொழுது “அவர் இப்பொழுதும் வெறும் வார்னராகத்தான் இருக்கிறார். அவர் கொஞ்சம் கோமாளியும் கூட. அவர் ஜோ ரூட் இடம் மைண்ட் கேம் விளையாட நினைக்கிறார். ஆனால் ஜோ ரூட் இப்படியான நகைச்சுவையான விஷயத்திற்கு எல்லாம் தயாராக இல்லை. இது வார்னரை பற்றிய விஷயம்தான்”

இதையும் படிங்க :

“ஜோ ரூட் நிறைய ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் இதையெல்லாம் கடந்து விட்டார். இதுவெல்லாம் அவரை பாதிப்படைய வைக்காது. இந்தியா இப்படியான முயற்சிகளில் இறங்கிய போதும் கூட அது பலன் அளிக்கவில்லை. ஏனென்றால் அவர் நிறைய ரன்கள் எடுத்து இதற்கெல்லாம் பழகிவிட்டார். உலகில் விமர்சனங்கள் பாதிக்காத வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -