இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் வெற்றியை முடிவு பண்ணக்கூடிய பந்துவீச்சாளர்கள் யாராக இருப்பார்கள் என ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல்கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்திய அணி உள்ளே வெளியே சாதனை
இந்திய அணி தொடர்ந்து உள்நாட்டில் நான்காயிரம் நாட்களுக்கும் மேலாக டெஸ்ட் தொடர்களை இழக்காமல் இருந்து வருகிறது. அதே சமயத்தில் இந்திய அணி இந்தியா தாண்டி டெஸ்ட் போட்டிகளை வெல்லும் விகிதம் மிகவும் அதிகரித்து இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே கடந்த இரண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா அணியால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இந்திய அணிக்கு எதிராக கைப்பற்ற முடியவில்லை.
இந்த இருவர் வெற்றியை முடிவு செய்வார்கள்
இந்த நிலையில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து கிளன் மேக்ஸ்வெல் பேசும் பொழுது “நீண்ட காலமாக நாங்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருக்கு எதிராக விளையாடி கொண்டு வருகிறோம். இதன் நீண்ட காலமாக எதிர்கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். மேலும் நாங்கள் மோதிக்கொண்ட போட்டிகளில் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களாக அவர்களே இருந்திருக்கிறார்கள்”
“அவர்களுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்கும் எல்லா நேரத்திலும் பொதுவாகவே நாங்கள் போட்டியில் சிறப்பான நிலையில் இருந்திருக்கிறோம். தனிப்பட்ட முறையில் இவர்கள் இருவரும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பகுதியில் எதிராக இருந்திருக்கிறார்கள்”
இதையும் படிங்க : 602 ரன்ஸ்.. 3 சதம்.. 2 மெண்டிஸ்கள் அபார ஆட்டம்.. நியூசிக்கு இலங்கை அணி செக்.. காலே 2வது டெஸ்ட்
“2013 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நான் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருந்த பொழுதும் பும்ரா பந்துவீச்சை வலையில் தினமும் எதிர்கொண்டு விளையாடியிருக்கிறேன். அவர் அங்கிருந்து ஆரம்பித்த விதத்தில் தற்பொழுது இருக்கும் நிலைக்கு அவர் ஒரு சிறந்த கதையாக இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான பந்துவீச்சாளராக மூன்று வடிவத்திலும் தொடர்கிறார்” என்று கூறியிருக்கிறார்