இந்திய கோச் பதவி இதனால எனக்கு வேணாம்.. யோசித்துதான் நான் இந்த முடிவை எடுத்தேன் – நெஹ்ரா பேட்டி

0
718

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதற்குப் பின்னர் பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு இறுதியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மற்றொரு பிரபலமான இந்திய பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ரா எதற்காக பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்ற காரணத்தை தற்போது கூறி இருக்கிறார்.

ராகுல் டிராவிட்டுக்கு இந்திய அணியினர் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த பிரியாவிடை கொடுத்தனர். அதற்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், மஹேலா ஜெயவர்த்தனே மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங் போன்ற வெளிநாட்டு வீரர்களும் பரிசீலனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒரு இந்திய வீரரை பயிற்சியாளராக நியமிக்க அதிகம் விரும்பியது.

- Advertisement -

அதற்குப் பிறகுதான் கௌதம் கம்பீர் பலகட்ட நேர்காணலுக்குப் பிறகு இறுதியாக இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை மிகச் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கும் முன்னாள் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.

குஜராத் அணியை இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக வழி நடத்தி, அதில் சாம்பியன் கோப்பையை வென்று தர முக்கிய பங்காற்றி இருக்கிறார். எப்போதும் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் நெஹ்ரா ஒருவேளை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தால் அது இந்திய அணிக்கு பெரிய ஆதரவாக அமைந்திருக்கும். இருப்பினும் அவர் தனது குழந்தைகளுக்கு ஆகவே தான் அந்த முடிவை எடுக்கவில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து நெஹ்ரா விரிவாக கூறும்பொழுது “நான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பது பற்றி சிந்திக்கவே இல்லை. எனது குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கௌதம் கம்பீருக்கும் சிறிய குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் ஒவ்வொருவருக்கும் வேறு வேறான யோசனைகள் உள்ளன. அதனால் கம்பீர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க:என்னை மாதிரி பசங்களுக்கு.. சிஎஸ்கே கடவுள் கொடுத்த பரிசு.. தோனி இல்லன்னா இது எனக்கு நடந்திருக்காது- பத்திராணா பேட்டி

அதனால்தான் நான் எங்கு செயல்படுகிறேனோ அங்கே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் குழந்தைகளைப் பிரிந்து 9 மாதங்களாக நான் பயணம் செய்யும் மனநிலையில் தற்போது இல்லை” என்று கூறியிருக்கிறார். தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கம்பீர் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு கொல்கத்தா ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியவர்.

- Advertisement -