சூரியகுமார் கேப்டன் ஆனதுக்கு காரணம் கம்பீர்தான்.. ஆனா பின்னணியில விஷயமே வேற – நெக்ரா பேட்டி

0
840
Nehra

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றதிற்கு பிறகு, இந்திய கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இந்திய t20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் கொண்டுவரப்பட்டதற்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆசிஸ் நெக்ரா பேசியிருக்கிறார்.

கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை என இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்து வந்தார். தொடர்ந்து வெள்ளைப்பந்து வடிவ இந்திய அணிகளுக்கு கேப்டனாக இருந்து உலகக் கோப்பை தொடர்களில் வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்திய டி20 அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆக கொண்டுவரப்பட்டிருக்கிறார். மற்ற இரண்டு வடிவங்களுக்கும் முக்கிய கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார். அதே சமயத்தில் மூன்று வடிவ இந்திய அணிக்கும் துணை கேப்டனாக சுப்மன் கில் கொண்டுவரப்படுகிறார்.

இதன் காரணமாக இனி இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் பதவிக்கான போட்டியில் ஹர்திக் பாண்டியா பெயர் நீக்கப்பட்டிருக்கிறது என்று தெளிவாகத் தெரிந்து விட்டது. மேலும் அஜித் அகர்கர் ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதியும் பணிச்சுமையும் அவரைக் கேப்டன் பொறுப்பிற்கு கொண்டு வராததற்கு முக்கிய காரணம் எனக் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஆசிஸ் நெக்ரா கூறும்பொழுது “கம்பீர் கேப்டனாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு இருந்த பொழுது அந்த அணியில் சூரியகுமார் யாதவ் விளையாடினார். எனவே புதிய பயிற்சியாளர் வந்ததால் புதிய கேப்டனை கொண்டு வந்தது போல் தெரியவில்லை. இருவருமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

கவுதம் கம்பீர் சூர்யாவின் திறமை மற்றும் பலத்தை நன்கு அறிந்தவராக இருக்கிறார். மற்ற நாடுகளைப் பார்த்தால் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் இரண்டு கேப்டன்கள் என பலர் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். கம்பீர் பயிற்சி காலத்தில் சூர்யா சிறந்த கேப்டனாக வருவார். எனவே இருவருக்கும் இடையே இருக்கும் புரிதல்தான் அவரை கேப்டனாக கொண்டு வந்திருக்கிறது.

இதையும் படிங்க : 1 கல் 3 பறவை.. ஜெய்ஷா போட்ட மொத்த பிளானையும் மாத்த போறேன் – பாகிஸ்தான் பசித் அலி சவால்

அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டின் முக்கிய கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கிறார். அவர் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக செயல்படுவார். இந்தியா இந்த ஆண்டில் ஐந்து அல்லது ஆறு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. சூரியகுமார் சிறிதளவு இந்திய அணியில் இருந்து வருகிறார். மற்ற இரண்டு வடிவங்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முன்னணியில் இருப்பார்கள். டி20 உலக கோப்பை தொடர் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -