முன்னாள் இந்திய வீரருக்கு பிசிசிஐ-ல் முக்கிய பதவி – சற்றுமுன் வெளியான தகவல்!

0
148

பிசிசிஐ பொருளாளராக இருந்து வரும் முன்னாள் இந்திய வீரர் அருண் துமாலூபிளப்பில்1°°க்கு பிசிசிஐ சேர்மன் பதவி கொடுக்கப்பட இருப்பதாக °தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிசிசிஐ மேல்மட்ட குழு சந்திப்பு டெல்லியில் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன், அசாம் மாநில முதல்வர் உட்பட பல்வேறு முக்கிய புள்ளிகள் பங்கேற்றனர். அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றாக பிசிசிஐ தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக கங்குலி போட்டியிடவில்லை என தெரிவித்திருக்கிறார். ஆகையால் புதிய தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு வருகிறது.

வருகிற அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதி பிசிசிஐ பதவிகளுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். 14ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். 18 ஆம் தேதி புதிய பிசிசிஐ தலைவர் அறிவிக்கப்படுவார் என பல்வேறு தகவல்களும் பிசிசிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. பிசிசிஐ தலைவர் பதவிக்கு 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்று இருந்த ரோஜர் பின்னியின் பெயர் அடிபடுகின்றன.

மேலும் பிசிசிஐ செயலாளராக தற்போது இருந்து வரும் ஜெய் ஷா மீண்டும் அந்த பதவியில் தொடர்வார். பிசிசிஐ பொருளாளர் பதவியில் இருந்து வரும் அருண் துமால் அதே பதவியில் தொடர்வார் என்றும் சந்திப்பிற்கு பிறகு வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து பிசிசிஐ சேர்மன் பதவி பற்றிய விவாதங்கள் நிலவி வந்தன. தொடர்ந்து இப்பதவியில் யாரையும் நியமிக்கலாம் என்று குழப்பங்களும் மேல்மட்ட குழுவினர் மத்தியில் இருந்தது. முன்னதாக பிசிசிஐ பொருளாளர் பதவியில் இருந்து வந்த அருள் துமாலை புதிய சேர்மனாக நியமிக்கபடலாம் என தெரிய வந்திருக்கிறது.

ஐபிஎல் நிர்வாகத்தில் பொறுப்பு வகித்து வந்த ராஜிவ் சுக்லா இம்முறை பிசிசி துணை தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என்றும் தெரிகிறது. இந்த பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி மாலை பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.