நேற்று தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதின் மூலமாக இந்திய அணியின் செமி பைனல் சிரமங்களை குறைத்து இருக்கிறது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பார்த்தது குறித்து இந்திய வீரர் அர்ஸ்தீப் சிங் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்றதின் மூலமாக இந்திய அணியின் ரன் ரேட் பிரச்சனை தீர்ந்திருக்கிறது. இந்திய அணி இப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றால் செமி பைனலுக்கு தகுதி பெற்று விட முடியும். ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இருந்தால் இந்திய அணி தனது ரன் ரேட்டை பெரிய அளவில் உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் தந்த சோதனை
நேற்று தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் போட்டி ஆரம்பித்ததுமே இந்திய ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் விஷயங்கள் நடந்தன. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டிஸ் 83 ரன்னுக்கு முதல் ஏழு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் சிக்கிக்கொண்டது.
இந்த மகிழ்ச்சி இந்திய ரசிகர்களுக்கு நீண்ட நேரம் நீடிக்க வில்லை. இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் இருவரும் அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோரை 176 என அருமையான இடத்திற்கு கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் மீண்டும் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும்பொழுது சிறப்பாக செயல்பட்டு 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
என் தந்தை கத்த ஆரம்பித்து விட்டார்
இந்தப் போட்டி குறித்து பேசி உள்ள அர்ஸ்தீப் சிங் ” நான் வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்க போட்டியை குடும்பத்துடன் எங்களுடைய ஹோட்டல் அறையில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் சிக்ஸர்கள் அடிக்க ஆரம்பித்ததும் எனது’ தந்தை ‘இந்த உலகத்தில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது’ என்று கத்த ஆரம்பித்து விட்டார். அவர் அப்யூஸ் செய்து கொண்டிருந்தார். நான் அவரை சமாதானப்படுத்தி தென் ஆப்பிரிக்க வெற்றிக்காக கடவுளை வேண்டிக் கொள்ளும்படி சொன்னேன்”
இதையும் படிங்க : 4 விக்கெட் போனாலும் இப்படித்தான் ஆடுவோம்.. எதிரணிக்கு ஒரு விஷயத்தை காட்ட முடிவு செய்தோம் – திலக் வர்மா பேட்டி
“தென் ஆப்பிரிக்கா அற்புதமாக விளையாடியது. இதற்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். எங்களுடைய விதியை எங்கள் கையில் நாங்கள் வைத்திருப்பதற்கு அவர்கள் எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். அவர்கள் விளையாடும் சிறப்பான கிரிக்கெட்டை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஆனாலும் இறுதிப் போட்டியில் அவர்களை சந்தித்தால் வெல்வதற்கு முயற்சி செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.






