இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் ஒரு புதிய சாதனை படைக்க இன்னும் அவருக்கு மூன்று விக்கட்டுகள் தேவைப்படுகிறது.
சாதனை படைத்த அர்ஸ்தீப் சிங்
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழும் அர்ஸ்தீப் சிங் அபாரமான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக மாறினார்.
96 விக்கெட்களோடு இதற்கு முன்பு சஹால் இருந்த நிலையில் அவரைப் பின்னுக்குத் தள்ளி தற்போது அர்ஸ்தீப் சிங் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிலையில் நாளை இந்திய அணிக்கு இங்கிலாந்து அணியோடு இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. எனவே இதிலும் வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்திய அணி தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
புதிய சாதனை படைக்க இன்னும் 3 விக்கெட்
இந்த சூழ்நிலையில் அர்ஸ்தீப் சிங் மேலும் ஒரு சிறப்பான புதிய சாதனை ஒன்றை படைக்க தயாராக இருக்கிறார். இதுவரை 97 விக்கெட்டுகள் அவர் வீழ்த்தி இருக்கும் நிலையில் இன்னும் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினால் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெறுவார். அது மட்டுமல்லாமல் உலக அளவில் டி20 ஃபார்மெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 21 வது பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெறுவார்.
இதையும் படிங்க:ரோஹித் அழுத்தத்தை தந்தாலும்.. மஹிபாய் மாதிரிதான் என்னோட பிளான் இருக்கும் – சூரியகுமார் யாதவ் பேட்டி
எனவே இதற்கு அவருக்கு இன்னும் மூன்று விக்கெட்டுகள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி 126 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 163 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஷாகிப் அல் ஹசன் (149), இஷ் சோதி (138), மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் (132) ஆகியோர் டி20 ஃபார்மெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களாக இருக்கின்றனர்.