முன்னாள் ஆர்சிபி வீரரின் சாதனையை முறியடித்த அர்ஸ்தீப்.. டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை.. இங்கி முதல் டி20

0
266

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது.

இதில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஒரு சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து முதல் டி20 போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இடையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் டக்கெட் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முதல் ஓவரை இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் வீச, அவரது மூன்றாவது பந்தியிலேயே பில் சால்ட் விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதற்குப் பிறகு பென் டக்கெட் களம் இறங்கி விளையாட, திரும்ப ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை அர்ஸ்தீப் சிங் வீசினார். அவரது ஐந்தாவது பந்தில் பென் டக்கட் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது ஆட்டத்தின் அவரது இரண்டாவது விக்கெட்டாக அமைந்தது.

- Advertisement -

அர்ஸ்தீப் சிங் அபார சாதனை

இரண்டாவது விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அர்ஸ்தீப் சிங் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மொத்தமாக 61 டி20 போட்டிகளில் விளையாடிய அர்ஸ்தீப் சிங் 97 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சுழற் பந்துவீச்சாளர் யுவேந்திர சகால் 96 விக்கட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நிலையில் அவரது சாதனையை தற்போது முறியடித்திருக்கிறார்.

இதையும் படிங்க:அப்ரிடிக்கு அப்ரோ.. இந்தியாவுக்கு இதை செஞ்சது பாபர் அசாம்தான்.. மறுக்கவே முடியாது – பாக் முன்னாள் கேப்டன் பேட்டி

80 டி20 போட்டிகளில் விளையாடிய சகால் 96 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில் 61 டி20 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பான சாதனையை அர்ஸ்தீப் சிங் படைத்திருக்கிறார். தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இருவது ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 132 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு இந்திய அணி தனது இன்னிங்ஸ் விளையாட காத்திருக்கிறது.

- Advertisement -