இந்திய அணி கடந்த வாரத்தில் டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வாக நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மைதானத்திலேயே அழுதார்கள். ஆனாலும் இளம் வீரரான அர்ஸ்தீப் சிங் அந்த நேரத்திலும் கொண்டாடினாரே தவிர அழவில்லை. தற்பொழுது இதற்கான காரணம் குறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணியின் பஸருல்லாஹ் பரூக்கி உடன் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக அர்ஸ்தீப் சிங் வந்தார். மேலும் இறுதிப் போட்டியில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, முக்கியமான 19 வது ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார்.
இந்த முறை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதில் ஒவ்வொரு வீரர்களின் பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது. இந்த வகையில் இவருடைய பங்களிப்பும் மிக முக்கியமான பங்களிப்பை வெற்றியில் கொண்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் டி20 கிரிக்கெட் இவரை நம்பி 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வருவதை ஏமாற்றாமல் செயல்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்து பேசிய அர்ஸ்தீப் சிங் ” இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் டேவிட் மில்லர் அடித்த பந்தை நான் சரியான இடத்தில் நின்று பார்த்தேன். அப்பொழுது பந்து சிக்ஸருக்கு சென்று விடும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் என்னுடைய இதயமே நின்று விடும் என்பது போல இருந்தது. ஆனால் ஒரு திரைப்படம் போல பந்து அப்படியே டிப் ஆனது. இதைப் பயன்படுத்தி சூரியகுமார் யாதவ் பந்தை தடுக்க நினைக்காமல் பிடித்து விட்டார்.
இறுதிப் போட்டிக்கு முன்பாக நான் அந்த இரவு மிக நன்றாக தூங்கினேன். அடுத்த நாள் நான் புதிதாக எழுந்தேன். உறக்கம் இல்லாத இரவுகள் என்று எனக்கு எதுவுமே கிடையாது. இறுதிப் போட்டி மிகப்பெரியதுதான் ஆனால் நாம் அதை இன்னொரு போட்டியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ரோகித் சர்மா எங்களுக்கு சொன்ன செய்தியாக இருந்தது.
இதையும் படிங்க : தென்னாப்பிரிக்கா ஜெயிக்கணும்.. பைனலில் சப்போர்ட் செய்த துருவ் ஜுரேல்.. யாருமே எதிர்பார்க்காத காரணம்
நான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் பல பரபரப்பான போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். அந்தப் போட்டிகள் எதுவும் பெரிய உணர்வுபூர்வமாக அமைந்தது கிடையாது. ஆனால் இறுதிப் போட்டி உணர்வுபூர்வமாக இருந்த போதிலும் எனக்கு கடுமையாக முயற்சி செய்தும் கூட அழுகையே வரவில்லை. இந்த விளையாட்டின் ஜாம்பவான் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பாய் இருவரையும் பார்க்கிறேன், அவர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் குறித்து மகிழ்ச்சியாக இருந்தேன், அழுகை மட்டும் வரவே இல்லை. இதற்கான காரணமும் எனக்குத் தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.