தென்னாப்பிரிக்கா ஜெயிக்கணும்.. பைனலில் சப்போர்ட் செய்த துருவ் ஜுரேல்.. யாருமே எதிர்பார்க்காத காரணம்

0
339

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய வீரரான துருவ் ஜூரேல் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற விரும்பியதாகவும், எதிரணிக்கு சப்போர்ட் செய்வதற்கான காரணத்தையும் சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. அதுவும் கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றியின் விளிம்பில் இருந்த தென்னாப்பிரிக்க அணியை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தனது இரண்டு ஓவர்கள் மூலம் மீண்டும் போட்டிய இந்தியனின் பக்கம் திருப்பியது, ஹர்திக் பாண்டியாவின் முக்கியமான ஓவரில் கிளாஸனின் விக்கெட்டை வீழ்த்தியது மேலும் கடைசி ஓவரில் டேவிட் மில்லரின் கேட்சை சூரியகுமார் யாதவ் அற்புதமாக பிடித்தது என்று இறுதிப் போட்டி பற்றி நினைவு கூற ஏராளமான சம்பவங்கள் உண்டு.

இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் மூலமாக அனைவரது மத்தியிலும் பிரபலமாக இருக்கும் வீரரான துருவ் ஜூரேல் இறுதிப் போட்டியின் போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை சுவாரசியமாக கூறியிருக்கிறார். இறுதிப்போட்டியை தொடக்கம் முதலே பார்த்து வந்த அவர், இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய போது தென்னாப்பிரிக்கா வெற்றியின் விளிம்பில் இருந்ததாகவும் இதனால் தென் ஆப்பிரிக்க வெற்றி பெற வேண்டும் என நினைத்தபோது இந்தியா வெற்றி பெற்றதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஜூரேல் விரிவாக கூறும்பொழுது ” நான் முதலில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று ஆதரித்தேன். ஆனால் அப்போது அந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற வேண்டும் என்று ஆதரித்தேன். இதனால்தான் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்றது. இந்தியா வெற்றி பெற்றதும் நான் ஒரு குழந்தையைப் போல எனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன்” என்று ஜூரேல் கூறி இருக்கிறார்.

அதாவது தான் வெற்றி பெற வேண்டும் என விரும்பிய அணி தோல்வியில் இருந்ததால், தோல்வியடைய வேண்டும் என்று நினைத்தபோது வெற்றி பெற்றதாக தனது ஜிங்க்ஸ் அனுபவத்தை கூறியிருக்கிறார். சீனியர் வீரர்கள் கொண்ட அணி டி20 உலக கோப்பையை வென்று இருப்பதால் அவர்களுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் கொண்ட கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க:நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.. கில் இல்லை யார் வேணா இருக்கட்டும் அதை செய்வேன் – ஜிம்பாப்வே முஸரபானி பேட்டி

அங்கு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில், அந்த இளம் படை மூலம் இந்திய அணிக்கு எதிர்காலத்திற்கு தேவையான வீரர்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். முதல் போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்க உள்ளது.

- Advertisement -