இந்திய கிரிக்கெட்

என்னுடைய இலங்கை அணி.. வெறும் மூன்று நாளில் இந்த இந்திய அணியை வீழ்த்தும் – அர்ஜுன ரணதுங்கா பேட்டி

இலங்கை அணியின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய அர்ஜுன ரணதுங்கா தன்னுடைய இலங்கை அணி இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று நாட்களில் வீழ்த்தும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறு அணியாக மாறி இருக்கிறது. இதன் காரணமாக நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மொத்தமாக தோற்று மோசமான வரலாறை எழுதியது.

ஆசிய கிரிக்கெட்டில் புதிய வரலாறு

1996 ஆம் ஆண்டு ஆசிய நாடுகளில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சிறிய அணியாக இலங்கை அணி கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்கா யாரும் எதிர்பார்க்காத மாற்றங்களை அணிக்குள் கொண்டு வந்து உலகக் கோப்பையை வென்று ஆச்சரியப்படுத்தினார்.

மேலும் அந்த அணியில் உலகப் புகழ்பெற்ற வீரர்களான முத்தையா முரளிதரன், சமீந்தா வாஸ் போன்றவர்கள் பந்துவீச்சில் இருந்தார்கள். மேலும் சனத் ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா பெரிய பேட்ஸ்மேன்களும் இருந்தார்கள். இந்த அணி அரையிறுதியில் இந்திய அணியை கொல்கத்தாவில் வைத்து வீழ்த்தியது. ஆனாலும் கூட அர்ஜுன ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி இந்திய அணியை ஒரு முறை கூட டெஸ்ட் போட்டியில் வென்றது கிடையாது. ஏழு போட்டியில் விளையாடி நான்கு போட்டியை தோற்று மூன்று போட்டியை டிரா செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மூன்றே நாட்களில் வீழ்த்தி விடுவோம்

தற்போது இந்திய டெஸ்ட் அறிகுறித்து பேசி இருக்கும் அர்ஜுன ரணதுங்கா கூறும் பொழுது “முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்தா வாஸ் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்த என்னுடைய இலங்கை அணியாக இருந்தால், இந்திய அணியை இந்தியாவில் வைத்து வெறும் மூன்று நாட்களில் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி விடுவோம்”

இதையும் படிங்க : ஆஸி ODI தொடர்.. இலங்கை அணி அறிவிப்பு.. மொத்த டீம்க்கும் நடந்த வினோத சோகம்.. முழுமையான தகவல்

“விராட் கோலியை பொருத்தவரை எடுத்துக் கொண்டால் அவர் சுனில் கவாஸ்கர், வெங்சர்கார் இல்லை ராகுல் டிராவிட் ஆகியோரிடம் தனது பேட்டிங் குறித்து பேச வேண்டும். நிச்சயம் அவர்களால் இவருக்கு நல்ல தீர்வை சொல்ல முடியும். அதே சமயத்தில் விராட் கோலி நிறைய ரன்கள் எடுத்திருக்கிறார். அதற்கு மதிப்பு கொடுத்து அவருடைய விஷயத்தில் அவரை முடிவு எடுக்க விட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts