இலங்கை அணி தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு அணியை அறிவித்திருக்கிறது.
இலங்கை வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபிக்கு பயிற்சியாக இலங்கையணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
முழு பலம் கொண்ட இலங்கை அணி
இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை அணிக்கு சரித் அசலங்கா தொடர்ந்து கேப்டனாக செயல்படுகிறார். மேலும் சுழல் இரட்டையர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் மதிஷா தீக்ஷனா இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். மேலும் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அனைவருமே இடம் பெற்று இருக்கிறார்கள்.
இத்துடன் வேகப்பந்து வீச்சிலும் அசிதா பெர்னாடோ மற்றும் லகிறு குமாரா இருவரும் இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது சுழல் பந்துவீச்சு, வேகப்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் யூனிட் என இலங்கை அணி முழு பலத்துடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்குகிறது. மேலும் இந்த தொடர் பிப்ரவரி 12 மற்றும் 14ஆம் தேதிகளில் இரண்டு போட்டிகளாக நடைபெறுகிறது.
வினோதமாக நடைபெற்ற சோகம்
இந்த அளவிற்கு பலமான அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது. அதே சமயத்தில் இந்தத் தொடரை சாம்பியன்ஸ் டிராபிக்கு பயிற்சியாக பயன்படுத்தும் நிலையில், இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபிக்கே தகுதி பெறவில்லை என்பது சோகமான சம்பவமாக அமைந்திருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியாக இருந்த போதும் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இதையும் படிங்க : கம்பீர் செய்கிற இது வீரர்களை காயப்படுத்தும்.. டிராவிட் ரொம்ப அற்புதமா இதை செஞ்சாரு – ஜாகிர் கான் பேட்டி
இலங்கை அணி: சரித் அசலங்க (கே), பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்க, நுவனிது பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, ஜெப்ரி வான்டர்சே, அசித பெர்னான்டோ, லகிரு குமாரா, முகமது சிராஸ் மற்றும் எசான் மலிங்கா.






