தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வந்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் இணைந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை டிரேடிங் மூலம் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு விற்றது. இந்த நிலையில் அவர் தற்போது இந்த அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்.
இதுகுறித்து அர்ஜுன் டெண்டுல்கர் கூறும் பொழுது “எல்லோருமே விளையாட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். யார் தான் விளையாட விரும்பாமல் பெஞ்சில் அமர்ந்திருக்க நினைப்பார்கள்? ஆனால் நாம் செய்யக் கூடியது எல்லாம் கடினமாக உழைப்பது மட்டும்தான். வாய்ப்பு வரும் பொழுது சிறப்பாக விளையாட வேண்டும்”
“இங்கு வரும்பொழுது ஒரு புதிய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். அதோடு ஒரு புதிய நகரத்தையும் பார்க்க போகிறேன், மேலும் சில புதிய உணவுகளையும் உண்டு மகிழலாம்”
“லக்னோ அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் கார்ல் க்ரோவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இவர் மற்றும் பரத் அருண் சார் இருவரும் இணைந்து பந்துவீச்சு பயிற்சி அளிக்கிறார்கள். இவர்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. அதனால் ஒவ்வொரு வீரர்களின் நிலை என்ன? என்பது குறித்து அவர்களுக்கு நன்றாக தெரியும்”
இதையும் படிங்க : நான் அந்த பையனை ஒரு கேம்ப்ல பார்த்தேன்.. நம்ம கிரிக்கெட்ல பெரிய ஆளா அவர் வருவார்.. வாய்ப்பு தொடர்ந்து தருவேன் – சுப்மன் கில் உறுதி
“இவர்கள் இருவருடனும் எனக்கு நிறைய உரையாடல்கள் நடந்தது. நான் இவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். மேலும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் இருவரிடம் இருந்து பேட்டிங்கில் பவர் ஹிட்டிங் பற்றி கற்றுக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.