இன்று நியூயார்க் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அமெரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான முறையில் பந்துவீசி ஆட்டநாயகன் விருதை இந்திய வீரர் அர்ஸ்தீப் சிங் வென்றார். போட்டிக்குப் பிறகு தன்னுடைய பந்துவீச்சு திட்டங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.
அமெரிக்க அணி இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து எட்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனாலும் குறிப்பிட்ட நியூயார்க் ஆடுகளத்தில் போராடுவதற்கு சரியான இடங்களாகவே இருந்தது. அந்த அணி முதலில் சரிந்து நடுவில் நல்ல ஸ்கோரை நோக்கி சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இந்திய அணிக்கு பந்துவீச்சில் முதல் ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் அந்த ஓவரிலேயே முக்கிய இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மீண்டும் இறுதிக்கட்டத்தில் பந்து வீச வந்த அவர் மேலும் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார். இன்றைய போட்டியில் அவர் நான்கு ஓவர்களில் ஒன்பது ரன்கள் மட்டுமே தந்து நான்கு விக்கெட் வீழ்த்தினார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு இதுவே ஆகும்.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணிக்கு சூரிய குமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் 49 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த சிவம் துபே 35 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். இது அணியின் சிறப்பான ஆட்டத்தால் 18.2 ஓவரில் இந்திய அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டநாயகன் விருது வென்ற அர்ஸ்தீப் சிங் பேசும்பொழுது “இன்றைய என்னுடைய பந்துவீச்சு செயல்பாட்டில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளாக நான் நிறைய ரன்கள் கொடுத்து விட்டேன். இதன் காரணமாக நான் மகிழ்ச்சியாக இல்லை. என்னுடைய அணி எப்பொழுதும் எனக்கு நம்பிக்கையை கொடுத்து என்னை ஆதரிக்கிறது. எனவே எனது அணிக்கு நான் ஏதாவது செய்ய நினைத்தேன்.இந்த ஆடுகளம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமானது.
இதையும் படிங்க : நாங்க இத மட்டும் செஞ்சிருந்தா இந்திய அணிய முடிச்சிருப்போம்.. ஆனாலும் எனக்கு பெருமைதான் – ஆரோன் ஜோன்ஸ் பேச்சு
இப்படியான விக்கெட்டில் திட்டம் எளிமையானது. பந்தை ஆடுகளத்தில் அடித்து வீச வேண்டும். மற்றதை பந்து பார்த்துக் கொள்ளும். மேலும் கடினமான லென்த்தில் வீச வேண்டும் என்பதுதான் திட்டமாக இருந்தது. எங்களுடைய மகிழ்ச்சியாளர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் அடுத்த சுற்றிலும் இதையே செய்ய நினைத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.