டெல்லி கேப்பிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் நோர்க்யா பங்கேற்பது கேள்விக்குறி – காரணம் இதுதான்

0
276
Anrich Nortje

தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆன்ட்ரிச் நோர்ஜே டெல்லி அணிக்காக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் மிக அற்புதமாக விளையாடினார். குறிப்பாக 2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த ஆண்டு டெல்லி அணி இறுதிப்போட்டி வரை முன்னேற இவரும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் 12 விக்கெட்டுகளை இவர் டெல்லி அணிக்காக கைப்பற்றினார்.

டெல்லி அணிக்காக மிக அற்புதமாக விளையாடிய இவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு அந்த அணி தக்க வைத்துக் கொண்டது. சுமார் 6 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு இவரை இந்த ஆண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலாக கடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இவர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இடுப்புப் பகுதியில் இவருக்கு பலமான காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி காயத்திற்குரிய சிகிச்சை எடுத்து வந்தார்.

கடந்த மாதம் தென் ஆப்ரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. அந்த டெஸ்ட் தொடரிலும் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தினால் ஆன்ட்ரிச் நோர்ஜே பங்கேற்கவில்லை.

தற்பொழுது தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகின்ற மார்ச் 18 முதல் ஏப்ரல் 11ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. ஒருநாள் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியானது. அந்த வீரர்கள் பட்டியலிலும் ஆனட்ரிச் நோர்ஜே பெயர் இடம்பெறவில்லை.

- Advertisement -

டெஸ்ட் தொடரிலும் இவர் பங்கேற்பது தற்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது. பலமான காயம் என்பதால் அது குணமடைய இன்னும் சில மாதங்கள் தேவைப்படலாம் என்று மருத்துவக்குழு கூறியதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் ஆனட்ரிச் நோர்ஜே விளையாடுவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்று கூறப்படுகின்றது.

எனினும் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக நம்மால் இது சம்பந்தமான முடிவை எடுத்து விட முடியாது. கூடிய விரைவில் அவரது காயம் முழுவதுமாக குணமடைந்து விட்டால் ஐபிஎல் தொடரின் பாதியில் இருந்து அவர் விளையாடுவார் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.