“10 வருடங்களாக நிறைவேறாத ஐசிசி கோப்பை கனவு” …… ஆஸ்திரேலியா அணியிடம் 209 ரண்களில் சரணடைந்த இந்தியா !

0
563

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 173 ரன்கள் முன்னிலை பெற்றது .

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 270 ரன்கள் 8 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளர் செய்து 444 ரன்கள் இந்தியாவிற்கு இலக்காக கொடுத்தது . இந்த இலக்கை துரத்தி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் சிறப்பாகவே அமைந்தது . கேமரூன் கிரீன் அற்புதமான கேட்ச்சில் சுப்மண் கில் ஆட்டம் இழக்க இந்திய அணியின் விக்கெட்டுகள் சரியத் துவங்கின .

- Advertisement -

அதன் பிறகு களம் இறங்கிய புஜாரா கேப்டன் ரோஹித் சர்மா உடன் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் . இவர்கள் இருவரும் இந்தியாவை ஒரு வலுவான நிலைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் துரதிஷ்டவசமாக ரோஹித் சர்மா லியான் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி 43 ரண்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து புஜாராவும் அடுத்த ஒரு ரண்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் 93 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது .

அப்போது ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரகானே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இருவரும் இணைந்து அதிரடியாகவும் நிதானமாகவும் ரண்களை குவித்து வந்ததால் இந்திய ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் நம்பிக்கை பிறந்தது . நேற்றைய நாள் ஆட்டத்தை 164 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழப்போடு நிறைவு செய்தது இந்தியா .

ஏழு விக்கெட் கைவசம் இருக்க 280 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியாவிற்கு முதல் ஒரு மணி நேரத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது . சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி 49 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்காட் போலான்ட் பந்துவீச்சில் டிவென்ஸ்மித்தின் அற்புதமான கேட்சில் ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும் ஆட்டம் இழக்க இந்தியாவின் கோப்பை கனவு தகந்தது .

- Advertisement -

முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரகானே 46 ரண்களிலும் பரத் 27 ரன்களிலும் தாக்கூர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்க இந்திய அணியின் தோல்வி உறுதியானது . இறுதியாக இந்தியா 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது . இதன் மூலம் இந்திய அணியின் மற்றும் ஒரு ஐசிசி கோப்பை காண கனவு தகந்தது . ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் நேத்து லியான் நான்கு விக்கெட்டுகளையும் ஸ்காட் போலான்ட் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த கேப்டன் பேட் கமின்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் .

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 2021-23 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இருக்கிறது . கடந்த முறை நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்த இந்தியா இந்த முறையும் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இழந்திருக்கிறது . இறுதியாக இந்தியா 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த 10 ஆண்டுகளில் ஒன்பது ஐசிசி போட்டிகளில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .