இந்தியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க 3 அணிகள் அறிவிப்பு.. கேப்டன் அதிரடி மாற்றம்.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

0
3968
Bavuma

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து டிசம்பர் 10 முதல் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கான மூன்று இந்திய அணிகளும் அறிவிக்கப்பட்டது. மூன்று அணிகளுக்கும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் 3 கேப்டன்களை அறிவித்தது. மேலும் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையை மனதில் வைத்து சில பரிசோதனை முயற்சிகளுக்கான வீரர்களையும் களமிறக்கி இருக்கிறது.

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கும் கேப்டன்சியும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான மூன்று வடிவிலான தொடர்களுக்கும் அறிவிக்கப்பட்ட மூன்று தென் ஆப்பிரிக்க அணிகளில், டெம்பா பவுமா டெஸ்ட் அணியில் மட்டுமே கேப்டனாக இடம்பெற்று இருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியாக முடிவுகள் எடுத்து எய்டன் மார்க்ரம்மை டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு கேப்டனாக ஆக்கியுள்ளது. சற்று முன் மூன்று வடிவ தொடர்களுக்கும் மூன்று அணிகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

- Advertisement -

டி20 தொடர் தென் ஆப்பிரிக்க அணி :

எய்டன் மார்க்ரம், ஒனியல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ், லுங்கி நிகிடி, பெலுவாக்கியோ.

ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்க அணி :

எய்டன் மார்க்ரம், ஒனியல் பார்ட்மேன், நான்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், மிஹ்லாலி போங்வானா, டேவிட் மில்லர், வான் முல்டர், தப்ரைஸ் ஷம்சி, ராஸ்ஸி வான் டெர் டுஸ்ன், கைல் வெர்ரிய்னே, லிசாட் வில்லியம்ஸ், பெலுவாக்கியோ.

டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்க அணி :

டெம்பா பவுமா, டேவிட் பெடிங்காம், நான்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ராம், வான் முல்டர், லுங்கி நிகிடி, கீகன் பீட்டர்சன், காகிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரிய்ன்னே.