நேற்று தென் ஆப்பிரிக்கா அணி டிக்ளர் செய்ய தாமதப்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் தெரிவித்த கருத்து தற்பொழுது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா தலைமை பயிற்சியாளர் இந்திய வீரர்களை அதிக நேரம் களத்தில் நிற்க வைக்க வேண்டும் எனவும், அதன் மூலம் அவர்களை ஊர்ந்து செல்ல அதாவது மண்டியிட வைக்க வேண்டும் என தாங்கள் விரும்பியதாக தெரிவித்தார். தற்போது இது பலராலும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.
பழைய வரலாறு
1980களில் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருந்த பொழுது, இங்கிலாந்து வீரர் டோனி கிரேக் வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்கள் கால்களுக்கு இடையில் ஊர்ந்து போக வைப்போம் என்று கூறியிருந்தார். இது அப்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக இருந்தது.
அவரின் இந்த ஆணவப் பேச்சு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை சிலிர்த்து எழ வைத்தது. இந்த நிலையில் அந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியை கூட தோற்காமல் இங்கிலாந்து அணியை மண்ணைக் கவ்வ வைத்தது. மீண்டும் இப்படியான ஒரு வார்த்தையை தென் ஆப்பிரிக்க கேப்டன் பயன்படுத்தியிருக்கிறார்.
இந்த காலத்தில் இது தவறானது
இது குறித்து பேசி உள்ள அனில் கும்ப்ளே “நவீன கிரிக்கெட்டில் குறிப்பாக பலம் வாய்ந்த ஒரு பெரிய அணியில் இருந்து இப்படியான ஒரு வார்த்தை வெளியில் வந்திருப்பது சரியானது கிடையாது. இதற்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து கேப்டன் வெஸ்ட் இண்டீஸ் அணியை குறித்து இப்படியான ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும்”
இதையும் படிங்க: 60 ஓவர்கள் 5 விக்கெட்டுகள்.. இந்திய அணி தப்பிக்குமா.. பரபரப்பான டெஸ்ட்.. என்ன செய்ய முடியும்?
“தென் ஆப்பிரிக்கா இந்த தொடரை வென்று விடும். ஆனால் நீங்கள் வெற்றி பெறக்கூடிய மேல் நிலையில் இருக்கும் பொழுது உங்களிடம் கொஞ்சம் பணிவும் இருக்க வேண்டும். பயிற்சியாளரிடமிருந்து அல்லது துணை ஊழியர்களிடம் இருந்தோ இப்படியான ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் வெற்றி பெறும் போது பணிவாக இருக்க வேண்டும். இப்படியான ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.






