60 ஓவர்கள் 5 விக்கெட்டுகள்.. இந்திய அணி தப்பிக்குமா.. பரபரப்பான டெஸ்ட்.. என்ன செய்ய முடியும்?

0
22
Harmer

இந்திய அணி தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருக்கிறது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருக்கும் தென் ஆப்பிரிக்கா 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. நேற்று நான்காவது நாள் முடிவில் இந்திய அணி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் விக்கெட்டை இழந்திருந்தது.

- Advertisement -

கலக்கும் ஹார்மர்

இன்று தொடர்ந்து விளையாட வந்த அணிக்கு நைட்டு வாட்ச்மேன் குல்தீப் யாதவ் களம் இறங்கி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடினார். கடைசியில் அவர் 38 பந்துகளை சந்தித்து ஐந்து ரன்கள் எடுத்து ஹார்மர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து உள்ளே வந்த துருவ் ஜுரல் அதே ஓவரிலேயே மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து இரண்டு ரன்கள் எடுத்து ஸ்லீப்பில் மார்க்ரம் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் அதிரடியாக 13 ரன்கள் எடுத்து அவரும் ஹார்மர் பந்துவீச்சில் மார்க்ரம் இடம் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்திய அணி தப்பிக்குமா?

இந்திய அணி தற்போது ஐந்து விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்திருக்கிறது. ரவீந்திர ஜடேஜா 23 மற்றும் சாய் சுதர்சன் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்கள். மேலும் வெளியில் வாசிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 3 வருஷம் ஆச்சு.. இன்னும் நீங்க சின்ன பையன் இல்ல.. எத்தனை தடவை இப்படி அவுட் ஆவிங்க.. ஆகாஷ் சோப்ரா கவலை

தற்போது மேற்கொண்டு இந்திய அணி 60 ஓவர்கள் விளையாட வேண்டி இருக்கிறது. கையில் 5 விக்கெட்டுகள் இருக்கிறது. இந்த போட்டியை இந்தியா டிரா செய்ய வேண்டும் என்றால், அடுத்த 30 ஓவர்களுக்கு விக்கெட் எதுவும் கொடுக்காமல் விளையாட வேண்டும். ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இந்த போட்டி டிரா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -