ரிஷப் பண்ட் துருவ் ஜுரல்.. தோனியின் இடம் யாருக்கு?.. அனில் கும்ப்ளே நேரடி பதில்

0
294
Jurel

இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவரது விக்கெட் கீப்பிங் திறமை இதுவரையில் மற்ற விக்கெட் கீப்பர்களிடம் இல்லாதது. மேலும் அவர் பினிஷிங் ரோலில் இதுவரை உலக கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்கள் வேறு யாரும் பெரிதாக இல்லை.

இதையெல்லாம் விட கேப்டன்ஷியில் உள் உணர்வில் செய்யக்கூடிய விஷயங்களை இன்னொருவர் அப்படியே செய்வது என்பது முடியாத காரியம். இப்படி மூன்று விதமான ரோல்களில் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய பணியை செய்து அவர் ஓய்வு பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு வரக்கூடியவர்களுக்கு பெரிய அழுத்தமும் நெருக்கடியும் இயல்பாக இருக்கிறது. இப்படியான அழுத்தத்தையும் நெருக்கடியையும் சுமந்து கொண்டு தன்னுடைய 20 ஆவது வயதில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் அறிமுகமானார்.

அவர் அறிமுகமான காலகட்டத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்புவதற்காக வந்ததால் எதிர்கொண்டார். இதனால் அறையில் கதவை சாத்தி அழுததாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தற்போது சாலை விபத்தில் சிக்கி மறு வாழ்வில் அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக துருவ் ஜுரல் மிகச் சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டு இருந்தார். அவருடைய விக்கெட் கீப்பிங்கும் குறிப்பிடும்படி இருந்தது. இதன் காரணமாக தற்பொழுது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பிரிவில் மூன்று வடிவத்திலும் இந்திய கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய வீரராக அவர் தெரிகிறார். இந்த இருவரில் யார் மகேந்திர சிங் தோனியின் இடத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிரப்புவார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து அணில் கும்ப்ளே கூறும்பொழுது ” எம் எஸ் தோனி தன் வாழ்வில் எட்டிய உயரங்களுக்கு துருவ் ஜுரல் நிச்சயம் செல்ல முடியும். அதற்கான திறமைகளை நான் அவரிடம் பார்க்கிறேன். அவருடைய பேட்டிங்கில் டிபென்ஸ் மட்டும் இல்லாமல் அட்டாக் பண்ணி விளையாடுவதும் சிறப்பாக இருக்கிறது. கடைசி கட்டத்தில் அவர் பெரிய சிக்ஸர்கள் அடித்தார்.

இதையும் படிங்க : AUSvsNZ.. வரலாற்று பார்ட்னர்ஷிப்.. கேமரூன் கிரீன் அதிரடி.. ஸ்மித்துக்கு நடந்த சோகம்

துருவ் ஜுரலை பார்ப்பதற்கு அவர் முற்றிலும் விதிவிலக்கான வீரராக தெரிகிறார். இன்னும் நாட்கள் செல்ல செல்ல அவர் வேகப்பந்து வீச்சில் மிகச்சிறப்பாக விளையாடுவார். அவர் இந்திய அணியில் வைத்திருப்பது மிகவும் நல்ல ஒரு விஷயம்” எனக்கூறி இருக்கிறார்.