வருகிற நவம்பர் மாதத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டனான பேட் கம்மின்ஸ் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலியா தீவிரம்
இந்திய அணியிடமிருந்து இந்த முறை பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணியும், தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய மண்ணில் மூன்றாவது முறை டெஸ்ட் கோப்பையை கைப்பற்ற இந்திய அணியும் விளையாட உள்ள பார்டர் கவாஸ்கர் ட்ராபி கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் 22ஆம் தேதி முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதற்காக பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் ஆஸ்திரேலியா அணி சிறந்த திட்டங்களை தீட்டி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு நான்காவது வரிசையில் களமிறங்கி விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். இருப்பினும் நான்காவது வரிசை விட தொடக்க வரிசை அவருக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இதுவரை 8 இன்னிங்ஸ் விளையாடிய ஸ்மித் 28.50 சராசரியுடன் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார். எனவே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வருவதால் அவரை அவர் விரும்பும் நான்காவது இடத்திலேயே களமிறங்க முடிவு செய்திருப்பதாக பேட் கம்மின்ஸ் கூறி இருக்கிறார்.
ஸ்மித்துக்கு அந்த இடம்தான் சரி
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆமாம் இது குறித்து நாங்கள் முன்னரே உரையாடி இருக்கிறோம். இன்னும் நாங்கள் எங்களது மனதை சரி செய்யவில்லை. கேமரூன் கிரீன் காயம் அடைந்திருக்கும் நிலையில் இப்போது ஸ்மித் அந்த வரிசையில் களமிறங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஸ்மித் கடந்த ஆண்டு துவக்கட்டக்காரராக களம் இறங்கியதில் மிகவும் உற்சாகமாக இருந்தார். அவர் அதனை செய்ததால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார் ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு நான்காவது இடம் பொருத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்து இருக்கிறார்” என்று கூறுகிறார்.
இதையும் படிங்க:கம்பீர் விராட்டுக்கு இதை செஞ்சிருக்க கூடாது.. புஜாரா அருமை இப்போ உங்களுக்கு புரியுதா? – கும்ப்ளே விமர்சனம்
ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் வீரரான கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள நிலையில் அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. எனவே அவருக்கு பதிலாக ஸ்மித் நான்காவது இடத்தில் களமிறங்கறது சரியானது என்று ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கூறி இருக்கிறார். மேலும் இந்திய அணிக்கு எதிரான தொடர் முக்கியமாக இருப்பதால் அவரை தொடக்க இடத்தில் களமிறங்கி சோதனை செய்ய விரும்பவில்லை என்று தெரிகிறது.