இந்திய கிரிக்கெட்

ஆஸி டெஸ்ட் தொடர்.. தம்பி ஜெய்ஸ்வால் இதை மட்டும் நீ அங்க மாத்திக்காத.. கலக்கலாம் – அனில் கும்ப்ளே அறிவுரை

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சாதிக்க மாட்டார் என்பதற்கான ஒரு காரணம் கூட கிடையாது என அனில் கும்ப்ளே கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரையில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று பெரிய சதங்கள் உடன் 1217 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த ஆண்டில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருக்கிறார்.

ஆஸ்திரேலியா மண்ணில் ஜெய்ஸ்வால் சாதிப்பார்

ஜெய்ஸ்வால் குறித்து இந்திய லெஜன்ட் அனில் கும்ப்ளே கூறும்பொழுது “ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா மண்ணில் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ளக் கூடாது. அவர்களுடைய பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக் கொள்வார் என்று நானும் நினைக்கவில்லை. ஜெய்ஸ்வால் தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு முதல்முறையாக சுற்றுப்பயணம் செய்தாலும் ஒரு ஆதாயம் அவருக்கு இருக்கிறது”

“தற்போது ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்திருக்கும் மிகச் சிறந்த ஆதாயம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முன்பாக அவர் உள்நாட்டில் இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்று விட்டு ஆஸ்திரேலியா செல்வார். ஒரு இளைஞராக 2 தொடர் வெற்றிகளுக்கு பிறகு பெரிய தொடருக்கு செல்வது தன்னம்பிக்கையை பெரிய அளவில் அதிகரிக்கும்”

- Advertisement -

ஒரு காரணம் கூட இல்லை

மேலும் பேசிய அனில் கும்ப்ளே “மற்ற அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் பொழுது அந்த மண்ணில் அவர்கள் ஏற்கனவே பெற்ற வெற்றிகள் அவர்களுக்கு சில தயக்கங்களை உண்டாக்குகிறது. அதனால் அவர்களுக்கு மிரட்டல் காரணி இருக்கிறது. ஆனால் இந்திய அணி தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று இருப்பதால் அப்படியான பிரச்சனை எதுவும் இந்திய அணிக்கு கிடையாது”

இதையும் படிங்க : பாபருக்கு பதிலாக வந்த பையன்.. சாதாரண ஆள் இல்லை ஆஸி ஸ்மித் மாதிரி – நாசர் ஹுசைன் விளக்கம்

“ஜெய்ஸ்வால் பேட்டிங் தொழில்நுட்பமும் மற்றும் ரன் அடிப்பதற்கான அவரது பசியும் அவர் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும். அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் பொறுமையாக விளையாடினார். இரண்டாவது டெஸ்டில் தேவைப்பட்ட பொழுது அதிரடியாக விளையாடினார். அவர் ஆஸ்திரேலியா மண்ணில் சாதிக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts