பாபருக்கு பதிலாக வந்த பையன்.. சாதாரண ஆள் இல்லை ஆஸி ஸ்மித் மாதிரி – நாசர் ஹுசைன் விளக்கம்

0
198
Nasser

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகி சதம் அடித்த கம்ரன் குலாம் பேட்டிங்கை பார்க்கும் பொழுது ஸ்டீவ் ஸ்மித் சாயல் இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறி இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக எஞ்சி இருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் அதிரடியாக நீக்கப்பட்டார். அணி நிர்வாகமும் அவருக்கு ஓய்வு கொடுத்திருப்பதாக கூறியது. எதிர் நிலையில் அவருடைய இடத்திற்கு கம்ரன் குலாம் என்கின்ற இளம் வலதுகை பேட்ஸ்மேன் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

அறிமுகப் போட்டியில் நெருக்கடியில் சதம்

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இரண்டு விக்கெட்டுகளை வேகமாக இழந்து விட்டது. இந்த நிலையில் அணியை மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடியில் அறிமுக வீரர் கம்ரன் குலாம் களம் இறங்கினார்.

தன்னுடைய அறிமுக சர்வதேச போட்டியாக இருந்த போதிலும் கூட அந்த பதட்டத்தை வெளியில் காட்டாமல், மிகச் சிறப்பாக விளையாடி 224 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அணியை காப்பாற்றினார். மேலும் பாபர் அசாம் போன்ற பெரிய பேட்ஸ்மேன் உடைய இடத்திற்கு வந்து சாதித்திருப்பது பெரிய விஷயம்.

- Advertisement -

ஸ்டீவ் ஸ்மித் சாயலை பார்க்கிறேன்

கம்ரன் குலாம் குறித்து நாசர் ஹூசைன் கூறும்பொழுது ” பாகிஸ்தான் வீரர்கள் பொதுவாக ஸ்வீப் ஷாட்டை விரும்புவார்கள். அதை கம்ரன் குலாம் தன்னுடைய லாக்கரில் வைத்திருக்கிறார். மேலும் தனது கால்களை பயன்படுத்தியும் சிறப்பாக விளையாடினார். அவர் பந்தை தடுத்து மற்றும் அடித்து விளையாடும் பொழுது அவரது பேட்டிங்கில் ஸ்டீவ் ஸ்மித் சாயல் கொஞ்சம் பார்க்க முடிந்தது”

இதையும் படிங்க : ரோகித் சொன்னது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடந்தது.. மைக்கேல் வாகன்கிட்ட போய் காட்டுங்க – பசித் அலி பேட்டி

“அவர் தனது முறைக்காக காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அவர் மூன்று வருடங்களாக உள்நாட்டில் பெரிய அளவில் ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் அவர் தாக்கி விளையாடும் பொழுதும் பந்தை தடுத்து விளையாடும் பொழுதும் இரண்டுக்குமே சரியான சமநிலையை பெற்றிருக்கிறார். அவர்கள்ஆரம்ப இரண்டு விக்கெட்டுகளை வேகமாக இழந்தபொழுது, அறிமுக வீரராக உள்ளே வந்து ரன்கள் எடுக்கவேண்டிய அவசியம் அவருக்கு உதவி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -