இந்திய கிரிக்கெட்

கம்பீர் விராட்டுக்கு இதை செஞ்சிருக்க கூடாது.. புஜாரா அருமை இப்போ உங்களுக்கு புரியுதா? – கும்ப்ளே விமர்சனம்

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக அனுப்பப்பட்டது தவறு என இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை. எனவே சர்பாரஸ் தான் அணியில் இடம் பெற்றார். மேலும் ஒரு மாற்றமாக ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு, குல்தீப் யாதவ் இடம் பெற்றார்.

இந்திய அணி நிர்வாகம் தவறான முடிவுகள்

இன்று வானம் மேகமூட்டத்துடன் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் இந்திய அணியில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தார்கள். மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இத்துடன் கில் இல்லாத காரணத்தினால் விராட் கோலியை மூன்றாவது இடத்தில் களம் இறக்கினார்கள். 9 பந்துகளை சந்தித்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அவருடைய வழக்கமான இடத்தில் களம் இறக்காமல் செய்தது தவறானது என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

விராட் கோலி விஷயத்தில் செய்தது தவறு

இதுகுறித்து விமர்சனம் செய்திருக்கும் அனில் கும்ப்ளே கூறும் பொழுது “விராட் கோலி அவருடைய இடமான நான்காவது இடத்தில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்தான் உங்கள் அணியின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். மூன்றாவது இடத்தில் புஜாரா போன்ற ஒருவர் மிகச் சிறப்பாக பல ஆண்டுகளாக விளையாடி வந்தார். அவர் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கிறார்”

இதையும் படிங்க : 46 ரன்.. இந்திய டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை.. தவறான முடிவால் சுருண்டது.. நியூசிலாந்து அபார பந்துவீச்சு

“இன்றைய போட்டியில் அவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? வெளியில் செல்லும் பந்தை விளையாட நினைத்திருப்பாரா? நிச்சயமாக அவர் அப்படி விளையாடு இருக்க மாட்டார். தற்போது புஜாராவின் அணுகுமுறைதான் இந்திய அணிக்கு தேவையாக இருக்கிறது. உண்மையில் இந்தியா தற்போது இந்த போட்டியில் கவலைக்குரிய இடத்தில் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts