இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்ட் டெஸ்ட்ல ODI கேப்டன்சி செஞ்சுகிட்டு இருக்காரு.. என்ன நடக்குதுனே புரியல – அனில் கும்ப்ளே விமர்சனம்

இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போல பீல்டிங் அமைப்பதாக அனில் கும்ப்ளே விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்று முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த நாளின் முடிவில் போட்டி யார் பக்கமும் செல்லாமல் பொதுவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன் சுந்தர் ஓவரில் நடந்தது

இன்று போட்டி துவங்கிய முதல் பகுதியிலேயே சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சுக்கு வந்துவிட்டார். காரணம் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அணியில் இருக்கும் நிதீஷ் குமார் ரெட்டி பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே ரியான் ரிக்கல்டன்னை குறிவைத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சுக்கு கொண்டுவரப்பட்டார்.

இந்த நிலையில் போட்டியின் முதல் நாள் முதல் பகுதியில் சுழல் பந்துவீச்சாளர் பந்து வீசும் போது பேட்ஸ்மேனுக்கு நெருக்கமாக பீல்டர்களை ரிஷப் பண்ட் வைக்கவில்லை. இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையில் இருந்த ஆகாஷ் சோப்ரா மற்றும் அனில் கும்ப்ளே இருவரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

இது எனக்கு புரியவில்லை

முதலில் இதுபற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “போட்டியின் முதல் நாளில் முதல் செஷனில் ஸ்பின்னர் பந்து வீசுகிறார். ஆனால் பேட்ஸ்மேனுக்கு பக்கத்தில் ஒரு பீல்டர் கூட இல்லை. அதே சமயத்தில் மிட் விக்கெட், லாங் ஆன் என பீல்டர்கள் எல்லோரும் வெளியில் இருக்கிறார்கள். இது நிச்சயம் ஒரு திட்டமாக இருக்க முடியாது. ரிஷப் பண்ட் கேப்டனாக என்ன நினைக்கிறார் என்று புரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் இது குறித்து சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஸ்டார்க் பர்பாமென்ஸ் பக்கத்துல கூட என் சதம் கிடையாது.. இந்த 3 பேருதான் என்னை ஓப்பனிங் அனுப்பினார்கள் – ஹெட் பேட்டி

இதைத் தொடர்ந்து இதற்கு பதில் அளித்து பேசிய அனில் கும்ப்ளே “பீல்டிங் வியூகம் முழுக்க லெக் சைடில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒருநாள் கிரிக்கெட்டில் அமைக்கப்படும் பீல்ட் செட்டப். மேலும் வெளியில் பவுண்டரி லைனில் மூன்று பீல்டர்கள் இருக்கிறார்கள். இது சரியான பீல்ட் அமைப்பு கிடையாது” என்று கூறினார்.

- Advertisement -
Published by

Recent Posts