வெறும் 16 வயது.. தந்தையின் சாதனையை முறியடித்த பிளின்டாப் மகன்.. ஆஸிக்கு எதிராக சாதனை

0
639
Flintoff

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப் மகன் ராக்கி பிளின்டாப் வெறும் 16 தன் தந்தையின் சாதனையை முறியடித்து அசத்தியிருக்கிறார்.

தற்போது இங்கிலாந்து ஏ அணியான இங்கிலாந்து லயன்ஸ் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டு வருகிறது. இதில் பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் களமிறங்கி ராக்கி பிளின்டாப் இங்கிலாந்து லயன்ஸ் வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

சரிந்த ஆஸ்திரேலியா ஏ அணி

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 214 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பேட் பிரவுன் ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் டேவிஸ் 109 பந்துகளில் 76 ரன்கள், ஃபிரடி 74 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி அந்த நேரத்தில் மிகவும் தடுமாற்றத்தில் இருந்தது. மேலும் ஆஸ்திரேலியா ஏ அணியின் ஸ்கோரை தாண்டுவதற்கு சந்தேகத்திற்கு இடமான சூழ்நிலையில் காணப்பட்டது.

- Advertisement -

ராக்கி பிளின்டாப் சாதனை

இதைத் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் களம் இறங்கிய ராக்கி பிளின்டாப் அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்து 127 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து 108 ரன்கள் எடுத்து அசத்தினார். இவரது அதிரடி சதத்தின் காரணமாக இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 316 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

இதையும் படிங்க : என்னையும் ரிஷப் பண்ட் பத்தியும் தவறா செய்தி பரவுது.. பிஆர் வச்சு செய்யறாங்க – சஞ்சீவ் கோயங்கா பேட்டி

தற்போது ராக்கி பிளின்டாப் இந்த சதத்தின் மூலம் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு மிகக் குறைந்த வயதில் சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அதற்கு தற்போது 16 ஆண்டுகள் 291 நாட்கள் வயதாகிறது. இவருடைய தந்தையான ஆன்ட்ரூ பிளின்டாப் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு தன்னுடைய இருபதாவது வயதில் தான் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தன் தந்தையின் சாதனையையும் 16 வயதில் முறியடித்து இருக்கிறார்!

- Advertisement -