நான் கேள்விப்பட்ட மிகமோசமான விஷயங்களில் பாஸ்பால் ஒன்று – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை விமர்சித்த முன்னாள் சூப்பர்ஸ்டார் பிளின்டாப்!

0
106
Flintoff

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி சிறிது காலத்திற்கு முன்புவரை மிகப்பெரிய சரிவை சந்தித்து வந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் வரை தட்டையான ஆடுகளங்களை அமைத்து, திறமையான பேட்ஸ்மேன்களை உருவாக்கத் தவறிவிட்டது.

தொடர் தோல்விகளால் விழித்துக்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவது பொருட்டு, தரமான ஆடுகளங்களை தயாரிக்கத் தொடங்கியது. அடுத்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட்டை நீக்கி பென் ஸ்டோக்சை கொண்டு வந்தது. மேலும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக இங்கிலாந்தில் அதிரடி முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் ஐ கொண்டு வந்தது.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் – பிரன்டன் மெக்கல்லம் கூட்டணி டெஸ்ட் போட்டிகளில் ஒரு அதிரடியான ஆட்ட அணுகுமுறையை கடைப்பிடித்தது. இந்த அணுகுமுறையில் உள்நாட்டில் வைத்து நியூசிலாந்து அணியை தொடர்ந்து மூன்று டெஸ்ட் களில் மரண அடி அடித்தது. இதற்கடுத்து இந்தியாவுடன் 378 ரன்களை சேஸ் செய்து அசத்தியது. அதிரடியான முறையில் தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து வெல்ல, அவர்களின் அணுகுமுறைக்கு பாஸ்
பால் என பெயரிடப்பட்டது. பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமின் பட்டப்பெயர் பாஸ். இதைக்கொண்டு பாஸ்பால் என்ற பெயர் வந்தது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்திற்கு வந்து தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி தங்களின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்தின் அதிரடியான பேட்டிங்கை நொறுக்கி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்தில் அதிரடி பேட்டி முறை விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் தற்போது நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை முதல் இன்னிங்சில் குறைந்த ஸ்கோரில் சுருட்டி இரண்டாவது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸின் சதத்தோடு 400 பிளஸ் ரன்களை இங்கிலாந்து குவித்து மிகப்பெரிய முன்னணியில் இருக்கிறது.

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணுகும் முறையான பாஸ்பால் குறித்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் சூப்பர் ஸ்டார் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆண்டு பிளின்ட்டாப் தனது அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். உலக கிரிக்கெட் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாத 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில், வலிமையான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த மிக முக்கியமாக காரணமாக இருந்தவர் இவர்தான். அந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் 402 ரன்கள், பவுலிங்கில் இருபத்தி நான்கு விக்கெட்டுகளை சாய்த்து தொடர் நாயகன் விருதை இவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவர் கூறும் பொழுது ” நான் கேள்விப்பட்ட விஷயங்களில் மிகவும் மோசமான விஷயங்களில் இந்த பாஸ்பால் கிரிக்கெட்டும் ஒன்று. எனக்கு இதில் ஆர்வம் இல்லை. அவர்கள் பெரும்பாலான மக்களுக்குப் பிடித்த மாதிரி உற்சாகமாக விளையாடுகிறார்கள் அவ்வளவுதான். பென் ஸ்டோக்ஸ் சிறந்த மனிதர். அவரைப் பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. தற்போது உள்ள இளம் வீரர்களில் பலரை எனக்குத் தெரியாது. 31 வயதில் ஓய்வு பெற்று விட்டேன். பின்பு தான் நான் கொஞ்சம் சீக்கிரமாக ஓய்வு பெற்றதாக உணர்ந்தேன். நான் இன்னும் கொஞ்ச காலம் எனக்கு கிரிக்கெட்டில் இடம் தந்து இருக்க வேண்டும். அது இப்பொழுது யோசிக்கும் பொழுது வலிக்கிறது ” என்று தெரிவித்திருக்கிறார்!