தற்போது பரபரப்பாக மாறிவரும் டி20 கிரிக்கெட் உலகத்தில் ஒரு நாளுக்கும் குறைவான இடைவெளியில் உலகின் இரண்டு டி20 தொடர்களில் விளையாடி ஆண்ட்ரே ரசல் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
கிரிக்கெட் உலகில் டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு டி20 லீக்குகள் அதிகரித்து வருகிறது. இதில் அதிரடியாக விளையாடக்கூடிய கரிபியன் வீரர்களுக்கு பெரிய மதிப்பு இருக்கிறது. இந்த வகையில் ஆண்ட்ரே ரசல் உலகெங்கும் நடக்கும் பல்வேறு வகையான பிரான்சிஸைஸ் டி20 லீக்குகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
சமீபத்தில் ஆண்ட்ரே ரசல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்தார். மேலும் ஒட்டுமொத்தமாக 450 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த வகையில் பிரான்சிஸைஸ் டி20 லீக்கில் ஆண்ட்ரே ரசல் கரீபியனின் சகவீரர்களான பிராவோ மற்றும் பொல்லார்ட் இருவர்களுக்கு அடுத்து மிகப்பெரிய வீரராக விளங்குகிறார்.
மேலும் பிரான்சிசைஸ் டி20 லீக்குகளில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வைத்திருக்கும் நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் பல அணிகளை வாங்கி இருக்கிறது. இதில் ஐபிஎல், சிபிஎல் மற்றும் சவுதி அரேபியாவின் ஐஎல்டி என நைட் ரைடர்ஸின் மூன்று அணிகளுக்கு ஆண்ட்ரே ரசல் நிரந்தர வீரராக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆண்ட்ரே ரசல் நேற்று பிப்ரவரி இரண்டாம் தேதி ஐஎல்டி தொடரில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கினார். இதைத்தொடர்ந்து இன்று பிப்ரவரி 3ஆம் தேதி பங்களாதேஷ் பிரிமியர் டி20 லீக்கில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். 24 மணி நேரத்தில் இரண்டு வெவ்வேறு டி20 தொடர்களுக்கு நாடு விட்டு நாடு பறந்து விளையாடி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தியை வச்சு இந்த வேலையை செய்யலாம்.. அவர் வேற லெவல் ஆயிட்டார் – ஜாகிர் கான் பேட்டி
இதில் சவுதி அரேபியா ஐஎல்டி தொடரில் பந்துவீச்சில் சனகா விக்கெட்டை கைப்பற்றினார். அதே சமயத்தில் பேட்டிங்கில் கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் பிரிமியர் லீக்கில் ஒன்பது பந்துகளுக்கு வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.