அடுத்த ஆண்டு 2026 பிப்ரவரி மாதத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணியால் வெல்ல முடியுமா? என்பது குறித்தான அலசல்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய மண்ணில் நடைபெற இருப்பது ஒரு பக்கம் சாதகமாகவும் இன்னொரு பக்கம் சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய அழுத்தத்தையும் உருவாக்குகிறது. மேலும் இந்திய அணி தற்போது டி20 உலக சாம்பியனாக இருப்பதால், அதை தக்க வைக்க வேண்டிய கட்டாயமும் உருவாகி இருக்கிறது.
கம்பீருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கடந்த டி20 உலகக் கோப்பையில் இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரையும் ஒரே பிளேயிங் லெவனில் வைத்து, பேட்டிங் வரிசையை எட்டு வரையில் நீட்டி, டி20 கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடும் முறையை அப்போதைய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் அறிமுகப்படுத்தினார்கள்.
மேலும் பவுலிங் யூனிட்டில் ஒரு பின்னர் மற்றும் ஹர்திக் பாண்டியாவோடு இரண்டு பிரதான வேகப்பந்துவீச்சாளர்களையும் வைத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்த முறையை கொடுத்ததோடு அதற்கான வீரர்களையும் கம்பீருக்கு தானாகவே கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.
கம்பீர் செய்யும் சொதப்பல்
ரோகித் மற்றும் டிராவிட் கொடுத்து சென்று சரியான டெம்ப்ளேட்டை பயன்படுத்திக் கொள்ளாமல், கம்பீர் தானாக ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கி, மேலும் வீரர்களை பேட்டிங் வரிசையில் கண்ட இடத்தில் இறக்கி, பெரிய குழப்பத்தை அணிக்குள் ஏற்படுத்தி வருகிறார். தற்போது டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: நான் கில்லை நீக்க மாட்டேன்.. ஜெய்ஸ்வாலையும் கொண்டுவந்து இதை செய்வேன் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி
தற்போது கம்பீர் சிவம் துபே அல்லது வாஷிங்டன் சுந்தரை இதே அணியில் விளையாட வைத்துவிட்டு, பேட்டிங் வரிசையை மாற்றாமல் அப்படியே வீரர்களை களம் இறக்கினால் போதுமானது. இந்திய அணியின் குழப்பங்கள் பெரும்பாலும் தீர்ந்துவிடும். மேலும் கில் நிரூபிக்க தவறினால், அவரை நீக்கிவிட்டு ஜெய்ஸ்வாலை உள்ளே கொண்டு வந்தால் இந்திய அணி இன்னும் பலமாக மாறும். கம்பீர் தானாக செய்வதற்கு இங்கு எந்த வேலையுமே கிடையாது. ஆனால் அவர் ஏதாவது செய்வதுதான் இந்திய அணிக்கு பிரச்சினையாக மாறி இருக்கிறது.






