சிஎஸ்கே கேப்டனாக இருந்து வரும் ருதுராஜ் அந்த பொறுப்புக்கு சரியானவர் கிடையாது என்று பலரும் கூட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் கேப்டனாக ருதுராஜ் எந்த விதமான புதிய முயற்சிகளையும் செய்யவில்லை. ஒரு அணி மிக வேகமாக அதிரடியாக விளையாடும் போது கேப்டன்கள் சில வித்தியாசமான முயற்சிகளை செய்து எதிரணியை தடுக்க பார்ப்பார்கள். ஆனால் ருதுராஜ் அப்படி எதையும் செய்யவில்லை. முதலில் அடிப்படையே தவறாக இருக்கிறது.
டெத் பவுலர்கள் யார்?
தற்போது சிஎஸ்கே அணியில் கடைசி நான்கு ஓவர்களை வீசுவதற்கு சரியான வேகப்பந்துவீச்சாளர்களாக அன்சூல் காம்போஜ் மற்றும் மேட் ஹென்றி இருவரும்தான் இருக்கிறார்கள். மேட் ஹென்றி சர்வதேச அனுபவம் இருப்பதோடு, நியூசிலாந்து அணிக்கு இறுதி கட்ட ஓவர்களில் பிளாக் ஹோலில் பந்து வீசும் திறமை இருப்பவர்.
இப்படி இருக்கும்போது நேற்று மேட் ஹென்றி ஓவரை இறுதிக் கட்டத்துக்கு கொண்டுவர ருதுராஜ் முயற்சி செய்யவில்லை. இதே போல போட்டியின் ஐந்தாவது ஓவரை வீசும் அன்சூல் காம்போஜை ஏழாவது ஓவரையும் தொடர்ந்து வீச வைக்கிறார். அப்படி செய்யாமல் அவரின் மூன்று ஓவர்களை இரண்டாவது பாதி பத்து ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
ஐந்தாவது பவுலர் சிரமம்
மேலும் ஐந்தாவது பவுலர் வீச வேண்டிய நான்கு ஓவர் கோட்டோவை முடிப்பதற்கு 7 முதல் 10 ஓவர்கள் வரையில் இருக்கும் நான்கு ஓவர்களை பயன்படுத்த வேண்டும். முழுமையாக இந்த நான்கு ஓவர்களையும் அவர்களுக்கே தர முடியாவிட்டாலும், குறைந்தது இரண்டு முதல் மூன்று ஓவர்கள் கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க : டி.கே தர சப்போர்ட் வேற மாதிரியானது.. 106 மீட்டர் சிக்ஸர் எல்லாம் எனக்கு ரொம்ப சாதாரணம்.. காரணம் இதுதான் – டேவிட் பேச்சு
இப்படி செய்வதின் மூலமாக இறுதிக்கட்ட ஓவர்களுக்கு அணியில் உள்ள சிறந்த பவுலர்களை கொண்டு செல்ல முடியும். ஆனால் ருதுராஜ் கேப்டன்சியை பார்க்கும் போது எந்த வித தெளிவான திட்டங்களும் இருப்பது போல் தெரியவில்லை. இதை அடுத்து சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் அவருக்கு கொஞ்சமும் திறமை இல்லை. எனவே சிஎஸ்கே அணி மீண்டு வருவதற்கு புதிய கேப்டன் தேவை!






