டி.கே தர சப்போர்ட் வேற மாதிரியானது.. 106 மீட்டர் சிக்ஸர் எல்லாம் எனக்கு ரொம்ப சாதாரணம்.. காரணம் இதுதான் – டேவிட் பேச்சு

0
4
David

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் 75 ரன்கள் குவித்து டிம் டேவிட் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டியில் அவர் அதிரடியாக விளையாடியது குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் 25 பந்துகளை சந்தித்த அவர் மூன்று பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் விளாசி தள்ளினார். இதில் ஜேமி ஓவர்டன் பந்தில் மைதானத்திற்கு வெளியே 106 மீட்டரில் ஒரு சிக்சர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

போட்டி மாறிய தருணம்

இந்த போட்டியில் ரஜத் படிதார் 13 வது ஓவர் உள்ளே வரும் வரையில் சிஎஸ்கே அணியின் கையில் ஆட்டம் இருந்தது. அவர் உள்ளே வந்த முதல் 8 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் அடித்து போட்டியை அதிரடியாக மாற்றினார்.

இதற்கு அடுத்து ஜேமி ஓவர்டன் வீசிய 18-வது ஓவரில் டிம் டேவிட் நான்கு சித்தர்கள் உடன் மொத்தம் 30 ரன்கள் குவித்தார். இது சிஎஸ்கே போட்டியை வெல்ல முடியாத இடத்திற்கு கொண்டு போனது. இந்த இரண்டு தருணங்களும் சிஎஸ்கே அணிக்கு எதிராக அமைந்தது.

- Advertisement -

எங்களுக்குள் போட்டி இருக்கும்

இதுகுறித்து டிம் டேவிட் பேசிய போது “இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் என் விளையாட்டை அதிகம் மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய மாட்டேன். சில நேரங்களில் அதிக நேரம் பேட்டிங் செய்ய வேண்டியது இருக்கும். மேலும் நாம் மிகவும் ஆபத்தான முறையில் விளையாடுகிறோம். இதனால் நமக்கு கெட்ட நாட்களும் வரும். நல்ல நாட்கள் வரும் பொழுது அதை அனுபவிக்க வேண்டும்”

இதையும் படிங்க : டேவிட் அடிச்ச சிக்ஸர்களை பார்த்து ரசிச்சேன்.. 13வது ஓவர்ல அந்த முடிவை எடுத்து தான் உள்ள வந்தேன் – ரஜத் படிதார் பேச்சு

“எங்கள் அணியில் துணை ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கிறது. டிகே போன்ற அனுபவசாலி ஒருவருடன் இணைந்து வேலை செய்வது சிறப்பானது. அவருக்கு இங்குள்ள சூழ்நிலை மிகவும் துல்லியமாகத் தெரியும். மேலும் நாங்கள் வலைப்பயிற்சியில் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர்கள் அடிப்பதில் போட்டி போடுவோம். ஆனால் போட்டியிலேயே அப்படி அடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -