2027 ODI உலக கோப்பை.. ரோகித் விராட் ஆடுவதில் திடீர் சிக்கல்.. பிசிசிஐ என்ன செய்யும்?.. முழு அலசல்

0
802
Rohit

தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

நட்சத்திரங்களால் ஏற்பட்ட சிக்கல்

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி கைப்பற்றியதும் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்கள். அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்பவில்லை.

இந்த நிலையில் இதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார்கள். மேலும் இவர்கள் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் இப்பொழுது சில தொழில் ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

2027 உலகக் கோப்பை ஆட முடியுமா?

இந்த உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில், ஏற்கனவே இரண்டு வடிவங்களில் இருவரும் ஓய்வு பெற்று விட்ட காரணத்தினால், மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் குறைவாக நடைபெறுகின்ற காரணத்தினால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு போட்டி பயிற்சி பெரிய அளவில் கிடைக்காது. எப்போதாவது நடத்தப்படும் ஒருநாள் தொடருக்கு திடீரென இவர்கள் வர வேண்டியதாக இருக்கும். இது இவர்களது பேட்டிங் பார்மை பாதிப்படைய வைக்கும்.

இதையும் படிங்க : என்னால விராட் செஞ்ச அந்த காரியத்த ஏத்துக்க முடியல.. ஆனாலும் எனக்கு செஞ்சதுக்கு நன்றி – ரவி சாஸ்திரி பேட்டி

ஐபிஎல் தொடருக்கு விளையாடாமல் இருந்து திரும்பி வரலாம். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் உலகக் கோப்பை தொடருக்கு தயாராவது மிகவும் கடினம். மேலும் விளையாடாமல் இருக்கும் காலகட்டத்தில் உடல் தகுதியை பராமரிப்பதும் மிக முக்கியமான விஷயம். மேலும் இவர்கள் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தோடு பார்ம் மற்றும் உடல் தகுதி இருந்தால் மட்டுமே இருவரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என ஏற்கனவே கம்பீர் சொல்லியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே கூடிய விரைவில் இவர்கள் மொத்தமாக ஓய்வையும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

- Advertisement -