அடுத்த ஆண்டு 2026 பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் இஷான் கிஷான் விளையாடுவதற்கு வாய்ப்பு இருப்பது குறித்தான ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இஷான் கிஷான் இரண்டாவது விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருக்கிறார். மேலும் மாற்று துவக்க ஆட்டக்காரர் இடத்திற்கும் இவரது பெயரே இருக்கிறது. மேலும் இவருக்கு அணியில் இடம் கிடைத்ததே ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
முதல் வாய்ப்பு எப்படி?
தற்போது முதல் விக்கெட் கீப்பராக இருக்கும் சஞ்சு சாம்சன் காயம் அடைந்தாலோ இல்லை சில போட்டிகளில் தொடர்ந்து மோசமாக விளையாடினாலோ இஷான் கிஷான் பிளேயிங் லெவலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் 100% உறுதியாகவே இருக்கிறது.
மேலும் அபிஷேக் ஷர்மா எப்படி விளையாடினாலும் அவருக்கு தொடர் முழுவதும் வாய்ப்பு கொடுப்பார்கள். எனவே அவர் சரியாக விளையாடாவிட்டால் இஷான் கிஷானுக்கு தொடக்க வீரர் வாய்ப்பு கிடைக்காது. ஆனால் அபிஷேக் ஷர்மா தொடரின் நடுவில் காயமடைந்தால் இஷான் கிஷான் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை அபிஷேக் ஷர்மா காயமடைந்து தொடரை விட்டு வெளியேறினால், உடனடியாக அந்த இடத்திற்கு ஜெய்ஸ்வால் கொண்டு வந்து விளையாட வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆச்சரியத் தகவல்
இதில் இன்னொரு கூடுதல் விஷயமாக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட அணியில் மிடில் ஆர்டருக்கும் இஷான் கிஷான் பேக்கப் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்பதுதான். தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் இருவரும் ஒரே அணியில் இடம் பெற்று விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.
இதையும் படிங்க : 50 ஓவர் 547 ரன்.. 3 சதங்கள்.. சூரியவன்சி சகிபுல் 2 மெகா சாதனைகள்.. பீகார் மிரட்டல் பேட்டிங்
எனவே இவர்களில் இருவரில் யாராவது விளையாட முடியாமல் போனால் அவர்களுடைய இடத்தில் இஷான் கிஷான் விளையாட முடியும். மேலும் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் களம் இறக்கி சுழல் பந்துவீச்சாளர்களை அடிப்பதற்காக இவரை பயன்படுத்தலாம். மேலும் சூரியகுமார் யாதவை ஐந்தாவது இடத்திற்கு தள்ளலாம். இப்படி ஒரு வாய்ப்பும் இருப்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.






