சிஎஸ்கே கையில் இருக்கும் வெற்றிக்கான 2 வழிகள்.. இந்த முறையாவது உணர்வார்களா? – முழு அலசல்

0
236
CSK

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளை தோற்று இருக்கிறது. இது மோசமான செயல்பாடு இல்லை என்றாலும் அவர்கள் உருவாக்கி இருக்கும் அணி மிகவும் சாதாரணமாக இருப்பது விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

எனவே சிஎஸ்கே ரசிகர்கள் முதல்முறையாக பெரிய அளவில் தங்கள் அணியை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு தருவது சர்ச்சையாக மாறியிருக்கிறது. சிஎஸ்கே அணி அடுத்து எந்த மாதிரியான பிளேயிங் லெவனுடன் வந்தால் வெல்ல முடியும் என்பது குறித்து இந்த சிறிய கட்டுரையில் பார்க்கலாம்.

- Advertisement -

முதல் பிளேயிங் லெவன்

சிஎஸ்கே அணி மூன்றாவது போட்டியில் விளையாடிய பிளேயிங் லெவனில் ராகுல் திரிபாதி இடத்துக்கு டெவோன் கான்வே மற்றும் ஜேமி ஓவர்டன் இடத்துக்கு அன்சூல் காம்போஜ் இருவரும் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் பேட்டிங்கில் டாப் ஆர்டர் பலமாகும். மேலும் பவர் பிளே பந்துவீச்சில் கலில் அகமதுக்கு அன்சூல் காம்போஜ் மூலம் நல்ல சப்போர்ட் கிடைக்கும்.

அதே சமயத்தில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இதில் பவர் பிளேவில் பந்து வீசுவார்கள். பதிரனா பவர் பிளேவுக்கு வரமாட்டார். எனவே அஸ்வின் பவர் பிளேவில் பந்து வீச வேண்டிய கட்டாயம் மீண்டும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சை பொறுத்த வரையில் சிஎஸ்கே அணிக்கு பிரச்சனை பவர் பிளேவிற்கான பந்துவீச்சாளர்கள் குறைவதுதான்.

- Advertisement -

இரண்டாவது பிளேயிங் லெவன்

சிஎஸ்கே அணி பவர் பிளேவில் சரியான பந்துவீச்சாளர்களை கொண்டு விளையாட வேண்டும் என்றால் பதிரனாவை வெளியில் வைக்க வேண்டும். அவருடைய இடத்திற்கு முகேஷ் சௌத்ரி, கமலேஸ் நாகர்கோட்டி இருவரில் ஒருவரை கொண்டு வரலாம். மேலும் விஜய் சங்கரை நீக்கிவிட்டு அந்த இடத்துக்கு ஜெமி ஓவர்டைன்னை கான்வேயுடன் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : சாய் சுதர்சன்தான் அடுத்த கவாஸ்கர்.. அந்த ஸ்பெஷல யார்கிட்டயும் பார்க்கல- நவ்ஜோத் சிங் சித்து பாராட்டு

இதன் மூலம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஒரு பக்கம் வலிமை அடையும், கூடுதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஜேமி ஓவர்டன் உடன் மொத்தம் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் கிடைப்பார்கள். இதனால் பவர் பிளேவில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச வேண்டிய அவசியம் உருவாகாது. எனவே சிஎஸ்கே அணி தற்போது இருக்கும் நிலைக்கு இந்த இரண்டு வகையான பிளேயிங் லெவனை கொண்டு வர முடியும். தொடர்ந்து என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

- Advertisement -