நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியால் கடந்த ஆண்டு ஆர்சிபி அணி செய்தது போல் தொடர்ந்து வெற்றிகள் பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு ஏன் முன்னேற முடியாது என்பது குறித்தான காரணங்களை இங்கு பார்க்கலாம்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தங்களுடைய கடைசி ஆறு போட்டிகளையும் வென்று எல்லோரும் ஆசிரியப்படும் விதமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதே போல் தங்களாலும் முன்னேற முடியும் என சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி அணியால் ஏன் முடிந்தது?
கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு நல்ல பேட்டிங் யூனிட் அமைந்திருந்தது. அதே சமயத்தில் பௌலிங் யூனிட் மிக மோசமாகவும் இல்லை. ஆரம்பப் போட்டிகளில் அவர்களுக்கு வெற்றி கைகளுக்கு வந்து நழுவிக் கொண்டிருந்தது. எனவே அவர்கள் வெற்றி பெறவே முடியாத ஒரு அணி போல தோற்றம் அளிக்கவில்லை. திறமை இருந்தும் வெல்ல முடியாத அணியாகத்தான் இருந்தார்கள்.
இதைத் தொடர்ந்து கடைசிக் கட்டத்தில் வாழ்வா சாவா நிலையில் ஸ்வப்னில் சிங்கைப் பிளேயிங் லெவனில் கொண்டு வந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடினார்கள். அவர்களுடைய துவக்க ஜோடி சிறப்பான முறையில் பங்களிப்பு செய்தது. மிடில் ஆர்டரில் ரஜத் பட்டிதார் அற்புதமாக விளையாடினார். மேலும் பேட்டிங் யூனிட்டில் பினிஷர் ஆக அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் நல்ல டச்சில் இருந்தார். அவர்களிடம் ஒரு கண்டறியப்பட்ட பிளேயிங் லெவன் இருந்தது. இதனால் அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடிந்தது.
சிஎஸ்கே அணியால் ஏன் முடியாது?
இப்போதைய சிஎஸ்கே அணியை கடந்த ஆண்டு ஆர்சிபி அணியுடன் ஒப்பிடும்பொழுது நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதுவரையில் சிஎஸ்கே அணிக்கு ஒரு சரியான பிளேயிங் லெவன் என எதுவுமே கிடையாது. இப்போது அணிக்கு வாங்கப்பட்டிருக்கும் டிவால்ட் பிரிவியசை எந்த வெளிநாட்டு வீரருக்கு பதிலாக உள்ளே கொண்டு வருவது என்கின்ற தெளிவு கூட இல்லை.
இதையும் படிங்க : வேற சம்பவமே இல்லையா.. பிளமிங் எங்கள அவமானப்படுத்திட்டாரு – சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்
மேலும் கடந்த ஆண்டு ஆர்சிபி அணி போல் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் சிஎஸ்கே அணிக்கு இல்லை. மிடில் மற்றும் பினிஷிங்கிலும் இதே பிரச்சனை இருக்கிறது. எனவே ஆர்சிபி அணி உடன் ஒப்பிடும் பொழுது சிஎஸ்கே அணி பேட்டிங் யூனிட்டில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் ஒரே ஆறுதலாக அவர்களுடைய பவுலிங் யூனிட் மட்டுமே இருக்கிறது. எனவே இன்னும் சரியான பிளேயிங் லெவனையே கண்டறிய முடியாத சிஎஸ்கே அணியால் கடந்த ஆண்டு ஆர்சிபி அணி போல ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம்!






