இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டி டிராவில் முடிவடைய, இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் கடைசி போட்டியை இந்திய அணி வென்றால் தொடரை டிரா செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விலகும் நட்சத்திர வீரர்கள்
இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாகவும், ரிஷப் பண்ட்டுக்கு காயத்தின் காரணமாகவும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படாது என்பது தெரிய வருகிறது. இதன் காரணமாக இவர்களுக்கு மாற்று வீரரை கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்கிறது.
அதே சமயத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் அன்சூல் காம்போஜ் நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் சர்துல் தாக்கூர் இடத்திற்கு குல்தீப் யாதவை கொண்டு வர வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
முக்கிய நான்கு மாற்றங்கள்
முதலில் பும்ரா இடத்திற்கு காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஆகாஷ் தீப் மற்றும் ரிஷப் பண்ட் இடத்திற்கு துருவ் ஜுரல் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் என்றும், அன்சூல் காம்போஜ் இடத்திற்கு அர்ஸ்தீப் சிங் மற்றும் சர்துல் தாக்கூர் இடத்திற்கு குல்திப் யாதவ் ஆகியோரும் சேர்க்கப்படலாம். போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் கடைசி 50 வருடத்தில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் விராட் கோலி தலைமையில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : யாரும் குறை சொல்லாதீங்க.. 8வது இடத்தில் கம்பீர் அந்த வேலையை செய்ய காரணமே இதுதான் – இந்திய பேட்டிங் கோச்
இந்திய பிளேயிங் லெவன்: ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல், சாய் சுதர்சன், கேப்டன் கில், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரல், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், முகமது சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங்.






