பாகிஸ்தான் போட்டிக்கு இந்திய அணிக்கு உருவான புது சிக்கல்.. ரோகித் படை சமாளிக்குமா?

0
562
T20iwc2024

நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் மைதானத்தில் விளையாடும் போட்டி அமைந்திருக்கிறது. பாகிஸ்தான் அணியை விட பலமாய் இந்த அணியாக கருதப்படும் இந்திய அணிக்கு இந்த போட்டியில் புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது.

இந்தப் போட்டி நடக்கும் நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானம் கடந்த வருடத்தில் கட்டத் துவங்கப்பட்டு இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு திறக்கப்பட்டு விட்டது. மேலும் மிகக் குறைந்த கால அளவில் ஐந்து மாதத்தில் ஆடுகளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடுகளம் வெளியில் உருவாக்கப்பட்டு மைதானத்தில் கொண்டு வந்து செட் செய்யப்படும் டிராப் இன் ஆடுகளம் ஆகும்.

- Advertisement -

நேற்று இந்த மைதானத்தில் முதல் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டன. இங்கு ஸ்பாஞ்ஜி பவுன்ஸ் எனப்படும் பவுன்ஸ் இருக்கிறது. பந்து வேகமாக விழுந்து வேகமாக பவுன்ஸ் ஆகாது. மாறாக விழுகின்ற வேகத்தை விட மிகக் குறைந்த வேகத்தில் பவுன்ஸ் ஆகும். மேலும் இந்த ஆடுகளம் மெதுவாகவும் கொஞ்சம் திரும்பும் வகையிலும் இருக்கிறது. கண்டிஷன் பந்து ஸ்விங் ஆகவும் செய்கிறது.

இந்தச் சூழ்நிலையை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களால் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அணியில் ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் உடன் ஏழு பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு, ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, முகமது அமீர் மற்றும் ஹாரிஸ் ரவூப் என உலகத்தரமான நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை களம் இறக்க முடியும்.

இவர்கள் நால்வருக்குமே பந்தில் நல்ல வேகம் இருக்கிறது. இதில் ஹாரிஸ் ரவூப் தவிர மற்ற மூன்று பேருமே பந்தை நன்றாக ஸ்விங் செய்ய முடிந்தவர்கள். மூவரும் பவர் பிளேவில் பந்து வீசக்கூடியவர்கள். மேலும் அணியில் இடம்பெறும் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இமாத் வாசிமும் பவர் பிளேவில் பந்து வீச முடித்தவர். மேலும் இவரால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் துவக்க ஆட்டக்காரராக வரும்பொழுது, அவர்களுக்கு தொந்தரவு தர முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : கவாஸ்கர் இந்திய அணிக்கு வேற லெவல் ஐடியா.. ரோகித் டிராவிட் இதை கவனிப்பார்களா?

இப்படி ஆடுகளம் மற்றும் மைதானத்தின் தன்மையின் காரணமாக தற்போது பலவீனமாக காணப்படும் பாகிஸ்தான் அணி பலமாக மாறி இருக்கிறது. அதே சமயத்தில் இந்த போட்டியை வெல்லும் என பலராலும் கணிக்கப்பட்ட இந்திய அணிக்கு புதிய சிக்கலும், நெருக்கடியும் தலைவலியும் உருவாகி இருக்கிறது. தற்பொழுது இந்திய அணிக்கு இந்த குறிப்பிட்ட நியூயார்க் ஆடுகளம் மற்றும் மைதானத்தன்மை எதிராக இருக்கிறது என்பதே உண்மை!