நடப்பு ஐபிஎல் தொடரில் நாளை சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் போட்டி குறித்து அமித் மிஸ்ரா பேசிய பொழுது குறிப்பிட்ட சேவாக் அவருடைய பாணியில் கலகலப்பான பதில் ஒன்றை தந்து சுவாரசியமாக்கி இருக்கிறார்.
தற்போது 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் புள்ளி பட்டியலில் 9 மற்றும் 10வது இடங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகள் இருக்கின்றன. இரண்டு அணிகளுமே எட்டு போட்டிகளில் இரண்டு போட்டிகளை மட்டுமே வென்று நான்கு புள்ளிகள் எடுத்து இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் மேலும் கீழும் ஆக கடைசி இடங்களில் இருக்கின்றன. எனவே நாளைய போட்டி இரு அணிக்கு மே முக்கியமானது.
பலமே பலவீனமாக மாறிய கதை
கடந்த ஆண்டு பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடைசியாக இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
இந்த ஆண்டு பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்துக்கு ராகுல் திரிபாதியை நீக்கிவிட்டு இஷான் கிஷானை கொண்டு வந்து இன்னும் அதிரடியான பேட்டிங் யூனிட்டை உருவாக்கியது. மேலும் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 286 ரன் குவிக்கவும் செய்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர்களுடைய அதிரடியான பேட்டி அணுகுமுறை அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. யாரும் எதிர்பார்க்காத வகையில் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்கள்.
சேவாக் ஞாபகப்படுத்திய விஷயம்
இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் பிளே ஆப் வாய்ப்பு பற்றி பேசிய அமித் மிஸ்ரா “ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் விளையாடும் விதத்தில் அவர்கள் மேலும் 6 போட்டிகளை வென்று பிளே ஆப் சுற்றுக்கு வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை. மேலும் தோனி டாப் ஆர்டரில் வந்து குறைந்தது 30 பந்துகள் ஆவது விளையாட வேண்டும். மேல் வரிசைக்கு தகுந்த மரியாதை உடன் அதை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க : 2வது இடத்தில் இருக்கும் டெல்லி கிடையாது.. இந்த 4 டீம் தான் பிளே ஆப் வரும் – அம்பதி ராயுடு தேர்வு
இதில் குறிப்பிட்ட சேவாக் “நாம் தற்போது ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியுமா என்று பேசிக் கொண்டிருக்கிறோம். தோனி மற்றும் சிஎஸ்கே அணி பற்றி நாம் பேசவில்லை” என்று நகைச்சுவையாக அமித் மிஸ்ராவுக்கு ஞாபகப்படுத்தினார். அதாவது தேவையில்லாமல் இந்த இடத்தில் தோனி சிஎஸ்கே வை பற்றி பேச வேண்டாம் என சேவாக் அவருடைய பாணியில் பதில் கொடுத்தது நகைச்சுவையான சம்பவமாக அமைந்திருக்கிறது.