பும்ரா பவுலிங்ல அடிச்சு விளையாட கனவு கண்டேன்.. மனசு சரியாக 2 நாள் ஆச்சு – அமெரிக்க கேப்டன் பேச்சு

0
342

இந்த டி20 உலக கோப்பையில் முதன் முறையாக பங்குபெற்ற அமெரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்கா அணியின் கேப்டனான மோனங்க் பட்டேல் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை தவறவிட்டது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஒன்பதாவது டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற நிலையில், போட்டியை நடத்திய அமெரிக்க அணி இந்த தொடரில் நேரடியாக பங்கேற்றது. வெறுமனே பங்கேற்றது மட்டும் இல்லாமல் சிறப்பாகவும் செயல்பட்டு அனைவரது கவனத்தையும் இருப்பது. சர்வதேச அணிகளில் முன்னணி அணியான பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னணி அணிகளான நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளே பங்கேற்காத சூழ்நிலையில் அமெரிக்க அணி தகுதி பெற்றது. இந்த நிலையில் அமெரிக்க அணிக்கு கேப்டனாக செயல்பட்ட மோனஙக் பட்டேல் போட்டியின் போது ஏற்பட்ட சிறிய காயத்தின் காரணமாக இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவரால் பங்கு பெற முடியவில்லை. அவருக்கு பதிலாக ஆரோன் ஜோன்ஸ் அணியை வழிநடத்தினார். இருப்பினும் இந்திய அணி அந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா தலைமையிலான பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட ஆர்வமாக இருந்ததாக சில முக்கிய கருத்துகளைக் கூறி இருக்கிறார். இது குறித்து மோனங்க் பட்டேல் விரிவாக கூறும்பொழுது “நான் இந்திய அணிக்கு எதிராக விளையாடவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளவே எனக்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. போட்டிக்காக இரண்டு அணிகளும் அறிவிக்கப்பட்ட போது பும்ரா தலைமையிலான பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது போல நான் எனக்குள் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தேன்.

என்னை தேற்றுவதற்கு எனது குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் வந்தது. ஆனால் அவை எதுவும் என்னை ஆறுதல் படுத்தவில்லை. நான் ஒரு அறையில் என்னை தனிமைப்படுத்தி அதிலிருந்து மெல்ல மீண்டு வர வேண்டி இருந்தது. தேசிய கீதத்திற்காக இரண்டு அணிகளும் ஒருங்கிணையும் போது அந்தத் தருணம் என்னை தாக்கியது.

இதையும் படிங்க:நான் கில்லை பத்தி அப்படி சொல்லவே இல்ல.. ஜிம்பாப்வே சீரிசையே அந்த காரணத்தால பாக்கல – ஆகாஷ் சோப்ரா மறுப்பு

அமெரிக்க கேப்டனாக நான் டாஸ் போட சென்றிருந்தால் அது எனக்கு மிகப் பெரிய தருணமாக இருந்திருக்கும். ஆனால் இப்போது அது எல்லாம் கடந்த காலம் ஆகிவிட்டது” என்று கூறி இருக்கிறார். லீக் சுற்றில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்த அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றில் தோல்வியை தழுவி டி20 உலக கோப்பை தொடரிலிருந்து அமெரிக்கா வெளியேறியது.

- Advertisement -